அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?’ என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ‘எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112 வது ) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்’ என்று கூறினார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) வழியாக வரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (முர்சல்) – முறிவுள்ளதாகும்.
ளஹ்ஹாக் அல்மஷ்ரிம்(ரஹ்) வழித்தொடர் (முஸ்னத்) முழுமைபெற்றதாகும் என அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்.
Book :66
(புகாரி: 5015)حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، وَالضَّحَّاكُ المَشْرِقِيُّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ القُرْآنِ فِي لَيْلَةٍ؟» فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ وَقَالُوا: أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «اللَّهُ الوَاحِدُ الصَّمَدُ ثُلُثُ القُرْآنِ»
சமீப விமர்சனங்கள்