தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5044

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

‘(நபியே!) இந்த ‘வஹீ’யை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (எங்கே வேத வசனங்களை மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தினால் அதை மனனமிடுவதற்காக ஓதியபடி) தம் நாவையும் தம் இதழ்களையும் அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ் ‘லா உக்சிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75 வது) அத்தியாயத்திலுள்ள ‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்களின் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்’ எனும் (திருக்குர்ஆன் 75:16, 17) வசனங்களை அருளினான். (அதாவது,) ‘உங்கள் நெஞ்சில் பதியச்செய்வதும் அதை நீங்கள் ஓதும்படி செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்’ (என்று சொன்னான்). ‘மேலும, நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்’ (திருக்குர்ஆன் 75:18) (அதாவது,) ‘நாம் இதனை அருளும்போது செவி கொடுத்துக் கேட்டுக்கொண்டிருங்கள்’ (என்றும் சொன்னான்). ‘பின்னர், இதன் கருத்தை விவரிப்பதும் எம்முடைய பொறுப்பேயாகும்’ (திருக்குர்ஆன் 75:19) (அதாவது,) ‘உங்கள் நாவினால் அதனை (மக்களுக்கு) விளக்கித் தரச்செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்’ என இறைவன் கூறினான்.

(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்பு) தம்மிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் (வஹீயுடன்) வருகையில் நபி(ஸல்) அவர்கள் தலையைத் தாழ்த்தி (மெளமானகக் கேட்டு)க் கொண்டிருப்பார்கள். அவர் (வசனங்களை அருளிவிட்டுச்) சென்றுவிடும்போது அல்லாஹ் வாக்களித்தபடி நபி(ஸல்) அவர்கள் வசனங்களை ஒதிக்கொண்டார்கள். 57

Book :66

(புகாரி: 5044)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فِي قَوْلِهِ

{لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16]، قَالَ: ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ جِبْرِيلُ بِالوَحْيِ، وَكَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ، فَيَشْتَدُّ عَلَيْهِ، وَكَانَ يُعْرَفُ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي فِي: {لاَ أُقْسِمُ بِيَوْمِ القِيَامَةِ} [القيامة: 1]، {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ، إِنَّ عَلَيْنَا جَمْعَهُ} [القيامة: 17] فَإِنَّ عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ {وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 17] فَإِذَا أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: 19] ” قَالَ: «إِنَّ عَلَيْنَا أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ»، قَالَ: «وَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ، فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.