பாடம் : 19 ஓர் அடிமை, சுதந்திரமான பெண்ணை மணந்துகொள்வது.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரிராவினால் மூன்று வழிமுறைகள் (நமக்கு) கிட்டின:
1. அவர் விடுதலைசெய்யப்பட்டபோது (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக் கொள்ளவும்) அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 30
2. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘விடுதலை செய்வதவருக்கே அடிமையின் வாரிசுரிமை கிட்டும்” என்றார்கள்.
3. நெருப்பின் மேல் பாத்திரம் இருக்கும் நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிலிருந்த குழப்பம் வைக்கப்பட்டது. உடனே அவர்கள், ‘நான் (நெருப்பின் மேல்) பாத்திரத்தைக் கண்டேனே (அது என்ன வாயிற்று?)” என்று கேட்டார்கள். அதற்கு, ‘அது பரிராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி, தர்மப் பொருளைத் தாங்கள் உண்ணமாட்டீர்களே!” என்று செல்லப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது பரிராவிற்குத் தான் தர்மம். நமக்கு அது அன்பளிப்பு!” என்று கூறினார்கள். 31
Book : 67
(புகாரி: 5097)بَابُ الحُرَّةِ تَحْتَ العَبْدِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
كَانَ فِي بَرِيرَةَ ثَلاَثُ سُنَنٍ: عَتَقَتْ فَخُيِّرَتْ، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» وَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبُرْمَةٌ عَلَى النَّارِ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ البَيْتِ، فَقَالَ: «أَلَمْ أَرَ البُرْمَةَ»، فَقِيلَ: لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، وَأَنْتَ لاَ تَأْكُلُ الصَّدَقَةَ، قَالَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ»
சமீப விமர்சனங்கள்