பாடம் : 20 ஒருவர் நான்கு பெண்களைவிட அதிகமான வர்களை மணமுடிக்கக் கூடாது.32 அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:3) அதாவது இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, அல்லது நான்கு நான்காக என அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இதைப் போன்றுதான் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகளை உடைய வானவர்களைஎனும் (35:1ஆவது) வசனமும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஓர் அநாதைப் பெண் ஒரு மனிதரிடம் (அவரின் பொறுப்பில்) இருப்பாள். அவரே அவளுடைய காப்பாளராவார். அவளை அவர் அவளுடைய செல்வத்திற்காக மணந்த அவளுடன் மோசமான முறையில் உறவாடுவார்; அவளுடைய செல்வம் தொடர்பான விஷயத்தில் நீதி செலுத்தமாட்டார். இத்தகைய பெண்ணைக் குறித்தே இந்த (திருக்குர்ஆன் 04:3 வது) வசனம் பேசுகிறது. அந்தக் காப்பாளர், (இவளைவிட்டுவிட்டு) இவளல்லாத அவரின் மனதுக்குப் பிடித்த வேறு பெண்களை இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, அல்லது நான்கு நான்காக மணக்கட்டும் (என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான்) 33
Book : 67
(புகாரி: 5098)بَابُ لاَ يَتَزَوَّجُ أَكْثَرَ مِنْ أَرْبَعٍ
لِقَوْلِهِ تَعَالَى: {مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ} [النساء: 3] وَقَالَ عَلِيُّ بْنُ الحُسَيْنِ عَلَيْهِمَا السَّلاَمُ: «يَعْنِي مَثْنَى أَوْ ثُلاَثَ أَوْ رُبَاعَ» وَقَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: {أُولِي أَجْنِحَةٍ مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ} [فاطر: 1]: «يَعْنِي مَثْنَى أَوْ ثُلاَثَ أَوْ رُبَاعَ»
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ
{وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي اليَتَامَى} [النساء: 3]، قَالَتْ: «اليَتِيمَةُ تَكُونُ عِنْدَ الرَّجُلِ وَهُوَ وَلِيُّهَا، فَيَتَزَوَّجُهَا عَلَى مَالِهَا، وَيُسِيءُ صُحْبَتَهَا، وَلاَ يَعْدِلُ فِي مَالِهَا، فَلْيَتَزَوَّجْ مَا طَابَ لَهُ مِنَ النِّسَاءِ سِوَاهَا، مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ»
சமீப விமர்சனங்கள்