ஆயிஷா(ரலி) அறிவித்தார்
”அந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல், அவர்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்” எனும் (திருக்குர்ஆன் 04:127 வது) இறைவசனம், ஒரு மனிதரின் பாதுகாப்பில் இருக்கும் அநாதைப் பெண்ணைக் குறிக்கிறது. அவள் அவரின் செல்வத்தில் பங்காளியாக இருக்கலாம். அவரே (மற்றவர்களைவிட) அவளுக்கு(க் காப்பாளராக இருக்க)த் தகுந்தவராகவும் இருக்கலாம். எனவே, அவளுடைய சொத்தில் வேறு யாரும் தம்முடன் பங்காளியாவதை விரும்பாமல் அவளைத் தாமே மணந்துகொள்ளவிரும்பி வேறு யாருக்கும் அவளை மணமுடித்துக் கொடுக்காமல் தம்மிடமே அவளை முடக்கிவைத்துக் கொண்டிருப்பார். 68
Book :67
(புகாரி: 5128)حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ
{وَمَا يُتْلَى عَلَيْكُمْ فِي الكِتَابِ فِي يَتَامَى النِّسَاءِ، اللَّاتِي لاَ تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ، وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ} [النساء: 127] قَالَتْ: «هَذَا فِي اليَتِيمَةِ الَّتِي تَكُونُ عِنْدَ الرَّجُلِ، لَعَلَّهَا أَنْ تَكُونَ شَرِيكَتَهُ فِي مَالِهِ، وَهُوَ أَوْلَى بِهَا، فَيَرْغَبُ عَنْهَا أَنْ يَنْكِحَهَا، فَيَعْضُلَهَا لِمَالِهَا، وَلاَ يُنْكِحَهَا غَيْرَهُ، كَرَاهِيَةَ أَنْ يَشْرَكَهُ أَحَدٌ فِي مَالِهَا»
சமீப விமர்சனங்கள்