தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5129

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணிலானார்கள்.)

-குனைஸ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப் போரில் கலந்துகொண்ட வருமாயிருந்தார்கள். மேலும், அன்னார் மதீனாவில் இறந்தார்கள்.

உமர் இப்னு கத்தாப்(ரலி) கூறினார்:

எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள் ஹஃப்ஸா குறித்து) எடுத்துரைத்து, ‘நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவைத் தங்களுக்கு மணமுடித்து வைக்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு உஸ்ஸமான்(ரலி), ‘(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)” என்று கூறினார்கள்.

சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து, ‘இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்று கூறினார்கள்.

எனவே, நான் அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) ‘நீங்கள் விரும்பினால், (என் மகள்) ஹஃப்ஸாவைத் தங்களுக்கு திருமணம் முடித்துவைக்கிறேன்” என்று கூறினேன். 69

Book :67

(புகாரி: 5129)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمٌ

أَنَّ ابْنَ عُمَرَ، أَخْبَرَهُ: أَنَّ عُمَرَ، حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ ابْنِ حُذَافَةَ السَّهْمِيِّ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ أَهْلِ بَدْرٍ، تُوُفِّيَ بِالْمَدِينَةِ، فَقَالَ عُمَرُ: ” لَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ، فَقُلْتُ: إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ ” فَقَالَ: سَأَنْظُرُ فِي أَمْرِي، «فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ لَقِيَنِي» فَقَالَ: بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا، قَالَ عُمَرُ: ” فَلَقِيتُ أَبَا بَكْرٍ، فَقُلْتُ: إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.