ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்” என்று கூறிவிட்டு, நீண்ட நேரம் நின்றிருந்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘தங்களுக்கு இவள் அவசியமில்லையானால், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு மஹ்ராகக் கொடுக்க உன்னிடம் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘என்னுடைய வேட்டியைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு நீர் இதைக் கொடுத்துவிட்டால், வேட்டியில்லாமல் நீர் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். எனவே, (இவளுக்கு மஹ்ர் செலுத்த) ஏதேனும் தேடுக!” என்றார்கள். ‘அவர் (தேடிவிட்டு வந்து) ‘ஒன்றும் கிடைக்கவில்லை” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக” என்று கூறினார்கள். அப்போதும அவருக்கு எதுவும்கிடைக்கவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம் இன்ன , இன்ன ” எனச் சில அத்தியாயங்களின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன்” என்று கூறினார்கள். 78
Book :67
(புகாரி: 5135)بَابٌ: السُّلْطَانُ وَلِيٌّ
لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ
جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنِّي وَهَبْتُ مِنْ نَفْسِي، فَقَامَتْ طَوِيلًا، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ، قَالَ: «هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ تُصْدِقُهَا؟» قَالَ: مَا عِنْدِي إِلَّا إِزَارِي، فَقَالَ: «إِنْ أَعْطَيْتَهَا إِيَّاهُ جَلَسْتَ لاَ إِزَارَ لَكَ، فَالْتَمِسْ شَيْئًا» فَقَالَ: مَا أَجِدُ شَيْئًا، فَقَالَ: «التَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ» فَلَمْ يَجِدْ، فَقَالَ: «أَمَعَكَ مِنَ القُرْآنِ شَيْءٌ؟» قَالَ: نَعَمْ، سُورَةُ كَذَا، وَسُورَةُ كَذَا، لِسُوَرٍ سَمَّاهَا، فَقَالَ: «قَدْ زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»
Bukhari-Tamil-5135.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5135.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்