தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5197

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ம்ரகணத் தொழுகை) தொழுதார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் தொழுதார்கள். அத்தொழுகையில் ‘அல்பகரா’ எனும் (2 வது) ஓதுமளவுக்கு வெகு நேரம் நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் (குனிந்து) ‘ருகூஉ’ செய்தார்கள். பின்பு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்து (நிலைக்கு வந்து) நீண்ட நேரம் நின்றார்கள்.

இ(ந்த நிலையான)து, முதலாம் நிலையை விடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள்.

இ(ந்த இரண்டாம் ருகூஉவான)து, முதலாம் ‘ருகூஉ’வை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ‘சஜ்தா’ (சிரவணக்கம்) செய்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து) எழுந்து (நிலையில்) நீண்ட நேரம் நின்றார்கள்.

இ(ந்த நிலையான)து, முந்தைய நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள்.

இ(ந்த ‘ருகூஉ’வான)து, முந்தைய ‘ருகூஉ’வை விடக் குறைவானதாக இருந்தது.

பிறகு நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள். இ(ந்த ‘ருகூஉ”வான)து முந்தைய ‘ருகூஉ’வை விடக் குறைவானதாக இருந்தது.

பிறகு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்பிற்காகவோ பிறப்பிற்காகவோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே, இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் (தொழுது கொண்டிருக்கையில்) இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்), ‘நான் (தொழுது கொண்டிருக்கையில்) ‘சொர்க்கத்தைக் கண்டேன்” அல்லது ‘சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது’. அதிலிருந்து (பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(தப் பழத்திலிருந்)து புசித்திருப்பீர்கள்.

மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல் (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள்.

மக்கள், ‘ஏன் (அது?) இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘பெண்களின் நிராகரிப்பே காரணம்” என்றார்கள். அப்போது ‘பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்?’ என வினவப்பட்டது. அதற்கு ‘கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவன் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் ‘உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்” என்று பதிலளித்தார்கள். 132

Book :67

(புகாரி: 5197)

بَابُ كُفْرَانِ العَشِيرِ وَهُوَ الزَّوْجُ، وَهُوَ الخَلِيطُ، مِنَ المُعَاشَرَةِ

فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ

خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ مَعَهُ، فَقَامَ قِيَامًا طَوِيلًا نَحْوًا مِنْ سُورَةِ البَقَرَةِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا، وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ قَامَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا، وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا، وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ، ثُمَّ سَجَدَ، ثُمَّ انْصَرَفَ، وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ»
قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ هَذَا، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ؟ فَقَالَ: «إِنِّي رَأَيْتُ الجَنَّةَ، أَوْ أُرِيتُ الجَنَّةَ، فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا، وَلَوْ أَخَذْتُهُ لَأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا، وَرَأَيْتُ النَّارَ، فَلَمْ أَرَ كَاليَوْمِ مَنْظَرًا قَطُّ، وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ» قَالُوا: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُفْرِهِنَّ» قِيلَ: يَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: ” يَكْفُرْنَ العَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.