மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், (ஒருவர் தம் மணபந்தயத்திலிருந்து விலகிக் கொள்ள தம் மனைவிக்கு) உரிமை அளிப்பது (‘கியார்’) குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) ‘(தம் துணைவியரான) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் (தம் மண பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள) உரிமை அளித்தார்கள்; அது என்ன தலாக்காவா ஆம்விட்டது?’ என்று கேட்டார்கள்.
(தொடர்ந்து அறிவிப்பாளர்) மஸ்ரூக்(ரஹ்) கூறினார்கள்.
(இவ்வாறு நான் என் மனைவிக்கு உரிமையளித்து) அவள் என்னையே தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டால், நான் அவளுக்கு (ஆரம்பத்தில்) ஒன்றென்ன! நூறு (தலாக்கு)க்கு உரிமை அளித்திருந்தாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன்.15
Book :68
(புகாரி: 5263)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَامِرٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ
سَأَلْتُ عَائِشَةَ، عَنِ الخِيَرَةِ، فَقَالَتْ: «خَيَّرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَفَكَانَ طَلاَقًا؟» قَالَ مَسْرُوقٌ: «لاَ أُبَالِي أَخَيَّرْتُهَا وَاحِدَةً أَوْ مِائَةً، بَعْدَ أَنْ تَخْتَارَنِي»
சமீப விமர்சனங்கள்