தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5273

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிடமிருந்து பிரிந்து கொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா? என்பது பற்றியும்.31

அல்லாஹ் கூறுகின்றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்ட மாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229)

ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்ட மாட்டார்கள் என அஞ்சினால் தவிர…எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள் என அஞ்சினால் தவிர.

(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவிற்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்

ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்’ என்று கூறினார். அப்போது, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?’ என்று கேட்டார்கள் அவர், ‘ஆம் (தந்து விடுகிறேன்)’ என்று கூறினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), ‘தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!’ என்று கூறினார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்;

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் ‘முதாபஆ’ (அறிவிப்பாளர் தொடரில் ஒற்றுமை இல்லை.)

Book : 68

(புகாரி: 5273)

بَابُ الخُلْعِ وَكَيْفَ الطَّلاَقُ فِيهِ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ} [البقرة: 229]- إِلَى قَوْلِهِ – {الظَّالِمُونَ} [البقرة: 229] وَأَجَازَ عُمَرُ، الخُلْعَ دُونَ السُّلْطَانِ وَأَجَازَ عُثْمَانُ، الخُلْعَ دُونَ عِقَاصِ رَأْسِهَا وَقَالَ طَاوُسٌ: {إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ} [البقرة: 229] فِيمَا افْتَرَضَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى صَاحِبِهِ فِي العِشْرَةِ وَالصُّحْبَةِ، وَلَمْ يَقُلْ قَوْلَ السُّفَهَاءِ: لاَ يَحِلُّ حَتَّى تَقُولَ لاَ أَغْتَسِلُ لَكَ مِنْ جَنَابَةٍ

حَدَّثَنَا  أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ

أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»





இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-5273 , 5274 , 5275 , 5276 , 5277 , இப்னு மாஜா-2056 , நஸாயீ-3463 , குப்ரா நஸாயீ-5628 , அல்முஃஜமுல் கபீர்-11834 , 11969 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.