பாடம் : 19 இணைவைப்பவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களை மணந்துகொள்வதும், (மணப்பதற்கு முன் மேற்கொள்ளவேண்டிய) அவர்களின் இத்தா’க் காலமும்.42
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தவரையில் இணைவைப்பாளர்கள் இரண்டு வகையினராக பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள். நபியவர்களம் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை இணைவைப்பாளர்கள் (சமாதான) ஒப்பந்தம் செய்தவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரியமாட்டார்கள். பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாம்) நாடு துறந்து (மதீனாவுகு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடையும் வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப் பின்) தூய்மையடைந்தால் மண முடித்துக் கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்து கொள்வதற்கு முன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவள் அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டாள். பகைவர்களிலுள்ள அடிமையான ஆணோ பெண்ணோ (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவர் சுதந்திரமானவராகவே கருதப்பட்டார். அவருக்கு மற்ற முஹாஜிர்களுக்குள்ள (நாடு துறந்து வந்தோருக்குள்ள) அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டன.
பின்னர் (இதன் அறிவிப்பாளரான) அதாஉ(ரஹ்), (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்(களின் பெண்)கள் குறித்து முஜாஹித்(ரஹ்) அறிவித்திருப்பதைப் போன்று (பின்வருமாறு) அறிவித்தார்கள்.
(சமாதான) ஒப்பந்தம் செய்த இணைவைப்பாளர்களின் ஆண் அடிமையோ, பெண் அடிமையோ (முஸ்லிமாம்) நாடு துறந்து வந்தால் அவர்கள் (தம் நாட்டிற்குத்) திருப்பி அனுப்பிவைக்கப்படவில்லை; அவர்களுக்குரிய விலை மட்டுமே திருப்பித் தரப்பட்டது.
Book : 68
(புகாரி: 5286)بَابُ نِكَاحِ مَنْ أَسْلَمَ مِنَ المُشْرِكَاتِ وَعِدَّتِهِنَّ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَقَالَ عَطَاءٌ: عَنِ ابْنِ عَبَّاسٍ
كَانَ المُشْرِكُونَ عَلَى مَنْزِلَتَيْنِ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمُؤْمِنِينَ: كَانُوا مُشْرِكِي أَهْلِ حَرْبٍ، يُقَاتِلُهُمْ وَيُقَاتِلُونَهُ، وَمُشْرِكِي أَهْلِ عَهْدٍ، لاَ يُقَاتِلُهُمْ وَلاَ يُقَاتِلُونَهُ، وَكَانَ إِذَا هَاجَرَتِ امْرَأَةٌ مِنْ أَهْلِ الحَرْبِ لَمْ تُخْطَبْ حَتَّى تَحِيضَ وَتَطْهُرَ، فَإِذَا طَهُرَتْ حَلَّ لَهَا النِّكَاحُ، فَإِنْ هَاجَرَ زَوْجُهَا قَبْلَ أَنْ تَنْكِحَ رُدَّتْ إِلَيْهِ، وَإِنْ هَاجَرَ عَبْدٌ مِنْهُمْ أَوْ أَمَةٌ فَهُمَا حُرَّانِ، وَلَهُمَا مَا لِلْمُهَاجِرِينَ – ثُمَّ ذَكَرَ مِنْ أَهْلِ العَهْدِ مِثْلَ حَدِيثِ مُجَاهِدٍ – وَإِنْ هَاجَرَ عَبْدٌ أَوْ أَمَةٌ لِلْمُشْرِكِينَ أَهْلِ العَهْدِ لَمْ يُرَدُّوا، وَرُدَّتْ أَثْمَانُهُمْ
சமீப விமர்சனங்கள்