தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5288

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 20

பகை நாட்டு இணைவைப்பாளரின், அல்லது இஸ்லாமிய நாட்டு முஸ்லிமல்லாத குடிமகனின் கிறித்தவ மனைவி, அல்லது இணைவைப் பாளியான மனைவி முஸ்லிமாகி விட்டால் (என்ன சட்டம்?)44

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தன் கணவனுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக ஒரு கிறித்தவப் பெண் முஸ்லிமாகிவிட்டால்கூட உடனே அவள் தன் கணவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்.

இப்ராஹீம் அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இஸ்லாமிய நாட்டின் ஒப்பந்தப் பிரஜையான முஸ்லிமல்லாத ஒரு பெண் முஸ்லிமாகிவிட்டாள். பிறகு அவள் ‘இத்தா’ காலத்தில் இருந்துகொண்டிருந்தபோது அவளுடைய கணவனும் முஸ்லிமானார். இப்போது அவள் அவருடைய மனைவிதானா? (அவர்கள் இடையிலான மணஉறவு முறிந்துவிட்டதா? அல்லது தொடர்கிறதா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இல்லை (முறிந்துவிட்டது); இனி அவளாக முன்வந்து (அதே கணவனைப்) புதிதாகத் திருமணம் செய்துகொண்டு ‘மஹ்ர்’ பெற்றுக்கொள்ள விரும்பினால் தவிர. (அப்போதுதான் பழைய கணவனுடன் தொடர்ந்து அவள் வாழ முடியும்)” என்று பதிலளித்தார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மேற்கண்ட நிலையில்) அவள் ‘இத்தா’வில் இருந்துகொண்டிருக்கும்போது கணவன் முஸ்லிமாகிவிட்டால் (புதிதாக) அவளை மணந்துகொள்ள வேண்டும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (முஸ்லிமாகிவிட்ட) அந்தப் பெண்கள் (முஸ்லிமல்லாத) தங்கள் கணவன்மார்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்தக் கணவன்மார்களும் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட வர்கள் அல்லர். (60:10)

ஹசன் அல்பளி (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அக்னி ஆராதனையாளர்களான) மஜூசி தம்பதிகள் ஒரே நேரத்தில் முஸ்லிமானால் (பழைய) மணஉறவிலேயே அவர்கள் இருவரும் நீடிப்பார்கள். அதே சமயம் அவர்களில் ஒருவர் மற்றவரை முந்திக்கொண்டு முஸ்லிமாகி, மற்றொருவர் (முஸ்லிமாக) மறுத்தார் எனில், (அவர்கள் இருவருக்கும் இடையே) மணமுறிவு ஏற்பட்டுவிடும்; அவள்மீது அவன் உரிமை கொண்டாட முடியாது.

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இணைவைப்பாளர்களிலுள்ள ஒரு பெண் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு) முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தால், (இணை வைப்பவரான) அவளுடைய (முன்னாள்) கணவனுக்கு அவள் மணக்கொடையை (மஹ்ரை)த் திருப்பிச் செலுத்த வேண்டுமா? ஏனெனில், அல்லாஹ் ‘(இப்பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்!’ (60:10) என்று கூறுகின்றானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘(அவசியம்) இல்லை. அதுவெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கும் (இணைவைப்பாளர் களான) ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே இருந்த ஒன்றுதான். (இன்று அது நடைமுறையில் இல்லை)” என்று பதிலளித்தார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கும் குறைஷியருக்கும் இடையே ஏற்பட்டிருந்த உடன்பாட்டின்போதுதான். (பின்னர், மக்கா வெற்றியின்போது காலாவதியாகிவிட்டது.)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இறைநம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் இறைநம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (புலம்பெயர்ந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப்பாருங்கள்…” எனும் (60:10ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (‘இணை வைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்’ என்று) இந்த நிபந்தனைகளுக்கு யார் ஒப்புதல் அளிக் கிறாரோ அவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டபோது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெறவில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் ‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன்’ என்று வார்த்தையால் மட்டுமே கூறினார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது கரம் பற்றியதைப் போன்று பெண்களிடம் செய்யவில்லை.)45

Book : 68

(புகாரி: 5288)

بَابُ إِذَا أَسْلَمَتِ المُشْرِكَةُ أَوِ النَّصْرَانِيَّةُ تَحْتَ الذِّمِّيِّ أَوِ الحَرْبِيِّ

وَقَالَ عَبْدُ الوَارِثِ: عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: «إِذَا أَسْلَمَتِ النَّصْرَانِيَّةُ قَبْلَ زَوْجِهَا بِسَاعَةٍ حَرُمَتْ عَلَيْهِ» وَقَالَ دَاوُدُ: عَنْ إِبْراهِيمَ الصَّائِغِ، سُئِلَ عَطَاءٌ: عَنِ امْرَأَةٍ مِنْ أَهْلِ العَهْدِ أَسْلَمَتْ، ثُمَّ أَسْلَمَ زَوْجُهَا فِي العِدَّةِ، أَهِيَ امْرَأَتُهُ؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَشَاءَ هِيَ بِنِكَاحٍ جَدِيدٍ وَصَدَاقٍ» وَقَالَ مُجَاهِدٌ: «إِذَا أَسْلَمَ فِي العِدَّةِ يَتَزَوَّجُهَا» وَقَالَ اللَّهُ تَعَالَى: {لاَ هُنَّ حِلٌّ لَهُمْ وَلاَ هُمْ يَحِلُّونَ لَهُنَّ} [الممتحنة: 10] وَقَالَ الحَسَنُ، وَقَتَادَةُ: فِي مَجُوسِيَّيْنِ أَسْلَمَا: هُمَا عَلَى نِكَاحِهِمَا، وَإِذَا سَبَقَ أَحَدُهُمَا صَاحِبَهُ وَأَبَى الآخَرُ بَانَتْ، لاَ سَبِيلَ لَهُ عَلَيْهَا وَقَالَ ابْنُ جُرَيْجٍ: قُلْتُ لِعَطَاءٍ: امْرَأَةٌ مِنَ المُشْرِكِينَ جَاءَتْ إِلَى المُسْلِمِينَ، أَيُعَاوَضُ زَوْجُهَا مِنْهَا، لِقَوْلِهِ تَعَالَى: {وَآتُوهُمْ مَا أَنْفَقُوا} [الممتحنة: 10] قَالَ: ” لاَ، إِنَّمَا كَانَ ذَاكَ بَيْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ أَهْلِ العَهْدِ وَقَالَ مُجَاهِدٌ: هَذَا كُلُّهُ فِي صُلْحٍ بَيْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ قُرَيْشٍ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي يُونُسُ، قَالَ ابْنُ شِهَابٍ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ

كَانَتِ المُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْتَحِنُهُنَّ بِقَوْلِ اللَّهِ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا، إِذَا جَاءَكُمُ المُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ} [الممتحنة: 10] إِلَى آخِرِ الآيَةِ. قَالَتْ عَائِشَةُ: فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ المُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ، قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ» لاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ قَطُّ، غَيْرَ أَنَّهُ بَايَعَهُنَّ بِالكَلاَمِ، وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النِّسَاءِ إِلَّا بِمَا أَمَرَهُ اللَّهُ، يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ: «قَدْ بَايَعْتُكُنَّ» كَلاَمًا





மேலும் பார்க்க: புகாரி-7214 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.