பாடம் : 21 தங்களுடைய மனைவியரை நெருங்குவ தில்லை எனச் சத்தியம் (ஈலா) செய்கிறவர் களுக்காக (அவர்களின் மனைவியர்) நான்கு மாதங்கள் எதிர்பார்க்கும் உரிமையுண்டு. (இக்காலத்திற்குள் அவர்கள் சத்தியத்திலிருந்து) மீண்டுவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக்க மன்னிக்கின்ற வனும் மிக்க அருள்கின்றவனும் ஆவான். (ஆனால்) அவர்கள் மணவிலக்கையே உறுதிசெய்வார்களாயின்,நிச்சயமாக அல்லாஹ் மிக்க செவியுறுவோனும் நன்கு அறிவோனும் ஆவான் எனும் (2:226, 227 ஆகிய) இறைவசனங்கள்.46 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபஇன் ஃபாஊ’ எனும் சொற்றொடருக்கு அவர்கள் மீண்டு கொண்டார்களானால்’ என்று பொருள்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாதகாலம்) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள் (இந்தக் காலக்கட்டத்தில்) அவர்களின் காலில்களுக்கு ஏற்பட்டிருந்தது. எனவே, அவர்கள் தங்களின் மாடியறையில் இருபத்தொன்பது நாள்கள் தங்கியிருந்துவிட்டு பிறகு இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாள்கள் தாம்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 68
(புகாரி: 5289)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {لِلَّذِينَ يُؤْلُونَ مِنْ نِسَائِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ، فَإِنْ فَاءُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ، وَإِنْ عَزَمُوا الطَّلاَقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ} فَإِنْ فَاءُوا: رَجَعُوا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ
آلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نِسَائِهِ، وَكَانَتْ انْفَكَّتْ رِجْلُهُ، فَأَقَامَ فِي مَشْرُبَةٍ لَهُ تِسْعًا وَعِشْرِينَ ثُمَّ نَزَلَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، آلَيْتَ شَهْرًا؟ فَقَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»
சமீப விமர்சனங்கள்