தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5292

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 மனைவி மக்களையும் சொத்து பத்துக் களையும் விட்டுவிட்டுக் காணாமற்போனவர் பற்றிய சட்டம்.49 போரின் போது (நம்) அணியிலிருந்து ஒருவர் காணாமற்போய்விட்டால் அவரை அவருடைய மனைவி ஒரு வருட காலம் எதிர்பார்ப்பாள் என சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினார்கள். (பிறகு விலையை ஒப்படைப்பதற்காக) அவளுடைய எசமானை ஒரு வருட காலம் தேடினார்கள். அவரைத் தேடியும் கிடைக்க வில்லை. அவர் காணாமல்போய்விட்டார். ஆகவே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஏழைகளுக்கு) ஒன்றிரண்டு வெள்ளி நாணயத்தைக் கொடுத்துக் கொண்டே இறைவா! இதை இன்ன மனிதருக்காக வழங்குகிறேன். அவர் வந்துவிட்டால் (தர்மம் வழங்கியதற்காக) எனக்கு (நன்மை) உண்டு; (அவருடைய கடனைச் செலுத்தவேண்டிய பொறுப்பும்) என் மீது உண்டு என்று கூறிவிட்டு,கண்டெடுக்கப்பட்ட பொருள் விஷயத்தில் இவ்வாறே செயல்படுங்கள் என்று சொன்னார்கள். இதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள்: இருக்கும் இடம் அறியப்படுகின்ற கைதி விஷயத்தில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், அவனுடைய மனைவி மறுமணம் செய்து கொள்ள மாட்டாள். அவனுடைய சொத்துகள் பங்கு வைக்கவும்படாது. அவனைக் குறித்த தகவல் கிடைக்காவிட்டால், காணாமல் போனவன் விஷயத்தில் கையாளப்படும் அதே வழிமுறை இவன் விஷயத்திலும் கையாளப் படும் என்று கூறினார்கள்.

 அல்முன்பஇஸ்(ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான யஸீத்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம், வழிதவறி வந்துவிட்ட ஆட்டைப் பற்றி வினவப்பட்டது நபி(ஸல்) அவர்கள் (வினவியவரிடம்), ‘அதை நீ பிடித்துக் கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரனுக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றி வினவப்பட்டது. (இதைச் செவியுற்ற) உடன் நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். (எந்த அளவிற்கென்றால்) அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன. பிறகு, ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் தான் (நடப்பதற்கு) குளம்பும், (நீரைச் சேமிக்கத்) தண்ணீர் பையும் (வயிறும்) உள்ளதே! அதை அதன் உரிமையாளன் சந்திக்கும் வரை தண்ணீர் அருந்தி (தாகம் தணித்து)க் கொள்கிறது. மரத்திலிருந்து அது (இலை தழைகளைத்) தின்கிறது’ என்று கூறினார்கள்.

மேலும், நபி(ஸல்) அவர்களிடம், கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்தும் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாள்ம தெரிந்து வைத்துக் கொண்டு ஓராண்டுக் காலத்திற்கு அதை அறிவிப்புச் செய்!

‘அதன் உரிமையாளரான உடையாளம் அறிந்தவர் வந்தால் சரி! (அதை அவரிடம் கொடுத்துவிடு;) இல்லாவிட்டால் அதை உன்னுடைய செல்வத்துடன் சேர்த்துக் கொள்!’ என்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

நான் ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இந்த அறிவிப்பைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து (கேட்டு) மனனமிடவில்லை. ‘வழிதவறி வந்துவிட்டவை தொடர்பாக யஸீத்(ரஹ்) அறிவித்துள்ள மேற்கண்ட ஹதீஸ், (நபித்தோழர்) ஸைத் இப்னு காலித் அல்ஜுஹைனீ(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதுதானே! எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கேட்டேன். அதற்கு ரபீஆ(ரஹ்) ‘ஆம்’ என்றார்கள்.

யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்:

(மேற்கண்ட ஹதீஸை) ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களிடமிருந்து யஸீத்(ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள். சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டார்கள்.

Book : 68

(புகாரி: 5292)

بَابُ حُكْمِ المَفْقُودِ فِي أَهْلِهِ وَمَالِهِ

وَقَالَ ابْنُ المُسَيِّبِ: «إِذَا فُقِدَ فِي الصَّفِّ عِنْدَ القِتَالِ تَرَبَّصُ امْرَأَتُهُ سَنَةً» وَاشْتَرَى ابْنُ مَسْعُودٍ جَارِيَةً، وَالتَمَسَ صَاحِبَهَا سَنَةً، فَلَمْ يَجِدْهُ، وَفُقِدَ، فَأَخَذَ يُعْطِي الدِّرْهَمَ وَالدِّرْهَمَيْنِ، وَقَالَ: ” اللَّهُمَّ عَنْ فُلاَنٍ فَإِنْ أَتَى فُلاَنٌ فَلِي وَعَلَيَّ، وَقَالَ: هَكَذَا فَافْعَلُوا بِاللُّقَطَةِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: نَحْوَهُ وَقَالَ الزُّهْرِيُّ: فِي الأَسِيرِ يُعْلَمُ مَكَانُهُ: ” لاَ تَتَزَوَّجُ امْرَأَتُهُ، وَلاَ يُقْسَمُ مَالُهُ، فَإِذَا انْقَطَعَ خَبَرُهُ فَسُنَّتُهُ سُنَّةُ المَفْقُودِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ ضَالَّةِ الغَنَمِ، فَقَالَ: «خُذْهَا، فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ» وَسُئِلَ عَنْ ضَالَّةِ الإِبِلِ، فَغَضِبَ وَاحْمَرَّتْ وَجْنَتَاهُ، وَقَالَ: «مَا لَكَ وَلَهَا، مَعَهَا الحِذَاءُ وَالسِّقَاءُ، تَشْرَبُ المَاءَ، وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا» وَسُئِلَ عَنِ اللُّقَطَةِ، فَقَالَ: «اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، وَعَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ مَنْ يَعْرِفُهَا، وَإِلَّا فَاخْلِطْهَا بِمَالِكَ» قَالَ سُفْيَانُ: فَلَقِيتُ رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ – قَالَ سُفْيَانُ: وَلَمْ أَحْفَظْ عَنْهُ شَيْئًا غَيْرَ هَذَا – فَقُلْتُ: أَرَأَيْتَ حَدِيثَ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ فِي أَمْرِ الضَّالَّةِ، هُوَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ؟ قَالَ: نَعَمْ، قَالَ يَحْيَى: وَيَقُولُ رَبِيعَةُ، عَنْ يَزِيدَ مَوْلَى المُنْبَعِثِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ سُفْيَانُ: فَلَقِيتُ رَبِيعَةَ فَقُلْتُ لَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.