தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5293

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 ழிஹார் (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்).51 (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோஅவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்து விட்டான் என்று தொடங்கி அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று முடியும் (58:1-4) இறைவசனங்கள். மா-க் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (-ழிஹார்’ செய்வது-) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், அடிமையின் ழிஹார்’சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றது தான் என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மா-க் (ரஹ்) அவர்கள், அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும் என்று கூறினார்கள். ஹஸன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திரமான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (ழிஹார்’ செய்து)விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியது தான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள யஊதூன) -மா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, (மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்று பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளது தான் . இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒரு முறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழி காட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம் : 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினை களில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்.53 நபி (ஸல்) அவர்கள், கண்ணீரினால் அல்லாஹ் வேதனை செய்ய மாட்டான். ஆனால், இதன் காரணத்தினால் அல்லாஹ் வேதனை செய்வான் என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.54 கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுது கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), மக்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்து கொண்டு) (அல்லாஹ்வின் சான்று களில்) ஒரு சான்றா?என்று கேட்டேன். அதற்கவர்கள், ஆம் என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன் செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பரவாயில்லை’ என்பது போல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக் காட்டி சைகை செய்தாரா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்றனர். அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவைச்) சுற்றி வந்தார்கள்.

அந்த (‘ஹஜருல் அஸ்வத்’ கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம் அதனை நோக்கி (தம் கையிலுள்ள ஒரு பொருளினால் முத்தமிடுவது போல்) சைகை செய்தபடி ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள்.

ஸைனர்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் ‘யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இதைப் போல் (சிறிது) திறக்கப்பட்டது’ என்று கூறி தம் கையால் 90 என்று (அரபி எண்வடிவில்) மடித்துக் காட்டினார்கள்.

Book : 68

(புகாரி: 5293)

بابُ الظِّهَارِ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا} [المجادلة: 1]- إِلَى قَوْلِهِ – {فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا} [المجادلة: 4] وَقَالَ لِي إِسْمَاعِيلُ: حَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ، عَنْ ظِهَارِ العَبْدِ، فَقَالَ: نَحْوَ ظِهَارِ الحُرِّ قَالَ مَالِكٌ: «وَصِيَامُ العَبْدِ شَهْرَانِ» وَقَالَ الحَسَنُ بْنُ الحُرِّ: «ظِهَارُ الحُرِّ وَالعَبْدِ، مِنَ الحُرَّةِ وَالأَمَةِ، سَوَاءٌ» وَقَالَ عِكْرِمَةُ: «إِنْ ظَاهَرَ مِنْ أَمَتِهِ فَلَيْسَ بِشَيْءٍ إِنَّمَا الظِّهَارُ مِنَ النِّسَاءِ» وَفِي العَرَبِيَّةِ: لِمَا قَالُوا: أَيْ [ص:51] فِيمَا قَالُوا، وَفِي بَعْضِ مَا قَالُوا، وَهَذَا أَوْلَى، لِأَنَّ اللَّهَ لَمْ يَدُلَّ عَلَى المُنْكَرِ وَقَوْلِ الزُّورِ

بَابُ الإِشَارَةِ فِي الطَّلاَقِ وَالأُمُورِ

وَقَالَ ابْنُ عُمَرَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يُعَذِّبُ اللَّهُ بِدَمْعِ العَيْنِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا» فَأَشَارَ إِلَى لِسَانِهِ وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ: أَشَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ أَيْ: «خُذِ النِّصْفَ» وَقَالَتْ أَسْمَاءُ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الكُسُوفِ، فَقُلْتُ لِعَائِشَةَ: مَا شَأْنُ النَّاسِ؟ وَهِيَ تُصَلِّي، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا إِلَى الشَّمْسِ، فَقُلْتُ: آيَةٌ؟ فَأَوْمَأَتْ بِرَأْسِهَا: أَنْ نَعَمْ وَقَالَ أَنَسٌ، أَوْمَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى أَبِي بَكْرٍ أَنْ يَتَقَدَّمَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ، أَوْمَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ: «لاَ حَرَجَ» وَقَالَ أَبُو قَتَادَةَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّيْدِ لِلْمُحْرِمِ: «آحَدٌ مِنْكُمْ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا، أَوْ أَشَارَ إِلَيْهَا» قَالُوا: لاَ، قَالَ: «فَكُلُوا»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

«طَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعِيرِهِ، وَكَانَ كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ، أَشَارَ إِلَيْهِ وَكَبَّرَ» وَقَالَتْ زَيْنَبُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فُتِحَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَعَقَدَ تِسْعِينَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.