தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5298

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் ஸஹர் உணவு உண்பதிலிருந்து ‘பிலாவின் அழைப்பு’ அல்லது ‘பிலாலின் (தொழுகை) அறிவிப்பு’ உங்களைத் தடுத்து விடவேண்டாம் . ஏனெனில், அவர் அழைப்பது அல்லது ‘அவர் (தொழுகை) அறிவிப்புச் செய்வது, ‘உங்களில் இரவுத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகத்தான் ‘சுப்ஹு’ அல்லது ‘ஃபஜர்’ நேரம் வந்துவிட்டது என்பதைத அறிவிப்பதற்காக அல்ல.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் இப்னு ஸுரைஉ(ரஹ்) இதை அறிவிக்கும்போது தம் கைகளை வெளிப்படுத்தினார்கள். பிறகு ஒரு கையை விட இன்னொரு கையை (நீளவாட்டில்) நீட்டிக் காட்டி (நீளவாட்டில் தோன்றும் அதி காலை வெளிச்சமே உண்மையான ஃபஜர் நேரம் ஆகும். அகலவாட்டில் தோன்றுவதன்று’ (என்பது போல்) சைகை செய்தார்கள்.

Book :68

(புகாரி: 5298)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لاَ يَمْنَعَنَّ أَحَدًا مِنْكُمْ نِدَاءُ بِلاَلٍ – أَوْ قَالَ أَذَانُهُ – مِنْ سَحُورِهِ، فَإِنَّمَا يُنَادِي – أَوْ قَالَ يُؤَذِّنُ – لِيَرْجِعَ قَائِمَكُمْ وَلَيْسَ أَنْ يَقُولَ – كَأَنَّهُ يَعْنِي – الصُّبْحَ أَوِ الفَجْرَ» وَأَظْهَرَ يَزِيدُ يَدَيْهِ، ثُمَّ مَدَّ إِحْدَاهُمَا مِنَ الأُخْرَى





4 comments on Bukhari-5298

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    உறங்குவதற்கு முன்பு வித்ரு தொழுதுவிட்டு இரவின் கடைசி பகுதியில் எழுந்து விட்டு இரவுத் தொழுகை தொழுகலாமா

    அதற்கு தொடர்பான உண்டான ஹதீஸ்களை பகிரவும்

    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

      ஜஸாக்கல்லாஹ்

      வித்ரு தொழுகையை தொழுததற்கு பிறகு இரவுத் தொழுகை தொழுகலாமா?

      இது தொடர்பான ஏதேனும் ஹதீஸ் உள்ளதா

      1. வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. இது நீங்கள் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு கூறப்பட்ட பதில் தான்.

        பார்க்க: முஸ்லிம்-1357.

        இந்த ஹதீஸில் தமிழ், அரபி பகுதி பிங்க் கலரில் உள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.