பாடம் : 40 மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் வரை தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும் எனும் (2:228ஆவது) வசனத் தொடர். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இத்தா’வில் உள்ள ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து, அவரிடம் வந்த பின் அவளுக்கு மூன்று மாதவிடாய்க் காலம் முடிந்தால், முதல் கணவனிடமிருந்து அவள் முற்றாகப் பிரிந்தவள் ஆவாள். (ஆனால்,) இந்த மாதவிடாய்க் காலத்தை இரண்டாம் கணவனுக்கான இத்தா’வாக அவள் கணக்கிட முடியாது. அவ்வாறு கணக்கிடலாம் என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் கருத்தே சுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மிக உவப்பானதாகும்.84 மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (2:228ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குரூஉ’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) அக்ரஅத்’ எனும் சொல்லுக்கு ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது’ என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது’ என்ற (எதிரிடையான) பொருளும் உண்டு. ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்ப்பதைக் குறிக்கவும் கரஅத்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு. பாடம் : 41 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் நிகழ்ச்சி.85 வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (மணவிலக்கு அளிக்கப்பட்டு இத்தா’வில் இருக்கும் பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள். எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்துகொள்கிறார். (ஏனெனில், சேர்ந்து வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (65:1ஆவது வசனத் தொடர்.) உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியி ருக்கும் இடத்திலேயே (இத்தா’விலிருக்கும்) பெண்களைக் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடி உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்… (65:6, 7).
5321. & 5322. காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) அவர்களும் சுலைமான் இப்னு யஸார்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்
யஹ்யா இப்னு ஸயீத் இப்னி ஆஸ்(ரஹ்) (தம் துணைவியாரான) அப்துர் ரஹ்மான் இப்னு அல்ஹகம் அவர்களின் புதல்வியை (ஒட்டுமொத்த)த் தலாக் சொல்லிவிட்டார். எனவே, அவரை (அவரின் தந்தை) அப்துர் ரஹ்மான் (தலாக் சொல்லப்பட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக்) குடிமாற்றினார். (இச்செய்தி அறிந்த) ஆயிஷா(ரலி) மதீனாவின் (அப்போதைய) ஆட்சித் தலைவராக இருந்து (அப்துர் ரஹ்மானின் சகோதரர்) மர்வான் இப்னு அல்ஹகம் அவர்களிடம் ஆளனுப்பி, ‘மர்வானே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (உங்கள் சகோதரர் புதல்வியான) அவளை (மணவிலக்கு அளிக்கப்பட்ட) அவளுடைய வீட்டிற்கே திருப்பி அனுப்புங்கள்!’ என்று கூறினார்கள். மர்வான், ‘(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் என்னை மிகைத்துவிட்டார். (என்னால் அவரைத் தடுக்க முடியவில்லை)’ என்று பதிலளித்தார். இவ்வாறு சுலைமான் இப்னு யஸார் அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.
காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார்:
மேலும், மர்வான் ‘ஃபாத்திமா பின்த் கைஸ் தொடர்பான தகவல் தங்களை வந்தடையவில்லையா? (அவர் இடம் மாறித்தானே ‘இத்தா’ இருந்தார்!’ என்று (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) கேட்டார். ஆயிஷா(ரலி), ஃபாத்திமா பின்த் கைஸின் செய்தியை நீங்கள் (ஆதாரமாகக்) குறிப்பிடாமல் இருப்பதால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்துவிடாது. (அவர் இடம் மாறியதற்குத் தக்க காரணம் இருந்தது.)’ என்று கூறினார்கள். அதற்கு மர்வான் இப்னி ஹகம் அவர்கள், ‘(ஃபாத்திமா இடம் மாறியதற்குக் காரணமாக அமைந்த) இடர்ப்பாடு ஏதேனும் தங்களுக்கு (ஏற்புடையதாக இருக்குமென்றால், இந்தத் தம்பதியரிடையே உள்ள (அதே விதமான) இடர்ப்பாடு (என் சகோதரர்) மகள் இடம் மாறுவதில்) தங்களுக்குப் போதும்தானே!’ என்று கூறினார்.
Book : 68
(புகாரி: 5321 & 5322)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَالمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلاَثَةَ قُرُوءٍ} [البقرة: 228]
وَقَالَ إِبْرَاهِيمُ: ” فِيمَنْ تَزَوَّجَ فِي العِدَّةِ، فَحَاضَتْ عِنْدَهُ ثَلاَثَ حِيَضٍ: بَانَتْ مِنَ الأَوَّلِ، وَلاَ تَحْتَسِبُ بِهِ لِمَنْ بَعْدَهُ ” وَقَالَ الزُّهْرِيُّ: «تَحْتَسِبُ، وَهَذَا أَحَبُّ إِلَى سُفْيَانَ» يَعْنِي قَوْلَ الزُّهْرِيِّ ” وَقَالَ مَعْمَرٌ: ” يُقَالُ: أَقْرَأَتِ المَرْأَةُ إِذَا دَنَا حَيْضُهَا، وَأَقْرَأَتْ إِذَا دَنَا طُهْرُهَا، وَيُقَالُ: مَا قَرَأَتْ بِسَلًى قَطُّ، إِذَا لَمْ تَجْمَعْ وَلَدًا فِي بَطْنِهَا
بَابُ قِصَّةِ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ
وَقَوْلِ اللَّهِ: {وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لاَ تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ، وَلاَ يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ، وَتِلْكَ حُدُودُ اللَّهِ، وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ، لاَ تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا} [الطلاق: 1]، {أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ، وَلاَ تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ وَإِنْ كُنَّ أُولاَتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ} [الطلاق: 6]- إِلَى قَوْلِهِ – {بَعْدَ عُسْرٍ يُسْرًا} [الطلاق: 7]
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، وَسُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّهُ سَمِعَهُمَا يَذْكُرَانِ
أَنَّ يَحْيَى بْنَ سَعِيدِ بْنِ العَاصِ طَلَّقَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَكَمِ، فَانْتَقَلَهَا عَبْدُ الرَّحْمَنِ، فَأَرْسَلَتْ عَائِشَةُ أُمُّ المُؤْمِنِيِنَ إِلَى مَرْوَانَ بْنِ الحَكَمِ، وَهُوَ أَمِيرُ المَدِينَةِ: «اتَّقِ اللَّهَ وَارْدُدْهَا إِلَى بَيْتِهَا» قَالَ مَرْوَانُ – فِي حَدِيثِ سُلَيْمَانَ -: إِنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الحَكَمِ غَلَبَنِي، وَقَالَ القَاسِمُ بْنُ مُحَمَّدٍ: أَوَمَا بَلَغَكِ شَأْنُ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ؟ قَالَتْ: «لاَ يَضُرُّكَ أَنْ لاَ تَذْكُرَ حَدِيثَ فَاطِمَةَ»، فَقَالَ مَرْوَانُ بْنُ الحَكَمِ: إِنْ كَانَ بِكِ شَرٌّ، فَحَسْبُكِ مَا بَيْنَ هَذَيْنِ مِنَ الشَّرِّ
சமீப விமர்சனங்கள்