பாடம் : 1 உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர் களானால், அவர்களுடைய இத்தா’ விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, இத்தா’வைக் கணக்கிட்டு வாருங்கள் (65:1). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள அஹ்ஸூ’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) அஹ்ஸய்னாஹு’எனும் சொல்லுக்கு அதை நாம் கணக்கிட்டு மனனமிட்டோம்’ என்று பொருள். ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளாமல் (மாதவிடாய் போன்ற வற்றிலிருந்து) அவள் தூய்மையானவளாய் இருக்கும் சமயத்தில் இரு சாட்சிகளின் முன்னிலையில் அளிக்கின்ற மணவிலக்கு (நபிவழியில் அமைந்த) தலாக்குஸ் ஸுன்னா’ ஆகும்.2
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும்.
என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்:
நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், ‘இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா? (அல்லது நீங்களாக இதைக் கூறுகிறீர்களா?’) என்று கேட்டதற்கு, அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்தே (இதை அறிவிக்கிறேன்)’ என்று பதிலளித்தார்கள்.3
Book : 69
69 – كِتَابُ النَّفَقَاتِ
بَابُ فَضْلِ النَّفَقَةِ عَلَى الأَهْلِ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ؟ قُلْ: العَفْوَ، كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ} وَقَالَ الحَسَنُ: ” العَفْوُ: الفَضْلُ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِيَّ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ
فَقُلْتُ: عَنِ النَّبِيِّ؟ فَقَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَنْفَقَ المُسْلِمُ نَفَقَةً عَلَى أَهْلِهِ، وَهُوَ يَحْتَسِبُهَا، كَانَتْ لَهُ صَدَقَةً»
சமீப விமர்சனங்கள்