தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5430

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 ரொட்டிக் குழம்பு

 காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார்

(அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா(ரலி) அவர்களின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைத்தன:

1. (அன்னை) ஆயிஷா(ரலி) அவரை வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்போது பரீராவின் எசமான்கள் ‘அவளுடைய வாரிசுரிமை (‘வலா’) எங்களுக்கு உரியதாகவே இருக்கும்’ என்று கூறினார்கள். அதை ஆயிஷா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டபோது, அவர்கள் ‘நீ விரும்பினால், பரீராவின் வாரிசுரிமை உனக்கேயுரியது என்று நீ அவர்களுக்கு நிபந்தனையிடலாம். ஏனெனில், வாரிசுரிமை (அவ்வடிமையை) விடுதலை செய்தவருக்கே கிடைக்கும்’ என்று கூறினார்கள்.

2. அவ்வாறே அவர் விடுதலை செய்யப்பட்டபோது அவர் தம் (அடிமைக்) கணவருடன் அவரின் மணபந்தத்தில் நீடிக்கவும் செய்யலாம். அல்லது கணவரைப் பிரிந்துவிடவும் செய்யலாம் என (இரண்டில் விரும்பியதைச் செய்து கொள்ள) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்.

3. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அடுப்பில் பாத்திரம் ஒன்று கொதித்துக் கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் காலை உணவைக் கொண்டு வரும்படி பணித்தார்கள். உடனே அவர்களுக்கு ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் கொண்டுவரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ‘இறைச்சி (சமைக்கப்பட்ட)தனை நான் பார்க்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு வீட்டார், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! ஆனால் அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்ட இறைச்சியாகும். அதை அவர் நமக்கு அன்பளிப்பாகத் தந்தார்’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அது அவருக்கு தர்மமாகும். நமக்கு அன்பளிப்பாகும்’ என்று கூறினார்கள்.52

Book : 70

(புகாரி: 5430)

بَابُ الأُدْمِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ رَبِيعَةَ، أَنَّهُ سَمِعَ القَاسِمَ بْنَ مُحَمَّدٍ، يَقُولُ

كَانَ فِي بَرِيرَةَ ثَلاَثُ سُنَنٍ: أَرَادَتْ عَائِشَةُ، أَنْ تَشْتَرِيَهَا فَتُعْتِقَهَا، فَقَالَ أَهْلُهَا: وَلَنَا الوَلاَءُ، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَوْ شِئْتِ شَرَطْتِيهِ لَهُمْ، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» قَالَ: وَأُعْتِقَتْ فَخُيِّرَتْ فِي أَنْ تَقِرَّ تَحْتَ زَوْجِهَا أَوْ تُفَارِقَهُ، وَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَيْتَ عَائِشَةَ وَعَلَى النَّارِ بُرْمَةٌ تَفُورُ، فَدَعَا بِالْغَدَاءِ فَأُتِيَ بِخُبْزٍ وَأُدْمٍ مِنْ أُدْمِ البَيْتِ، فَقَالَ: «أَلَمْ أَرَ لَحْمًا؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، وَلَكِنَّهُ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَأَهْدَتْهُ لَنَا، فَقَالَ: «هُوَ صَدَقَةٌ عَلَيْهَا، وَهَدِيَّةٌ لَنَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.