அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
(‘நபிமொழிகளை அதிகமாக அபூ ஹுரைரா அறிவிக்கிறாரே’ என்று மக்கள் என்னைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள்.) நான் என் பசி அடங்கினால் போதும் என்று நபி(ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். அந்தக் காலக் கட்டத்தில் புளித்து உப்பிய (உயர் தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; (மெல்லிய) பட்டாடையை நான் அணிவதுமில்லை; இன்னவரோ இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. (பசியின் காரணத்தால்) நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தேன்.
என்னை ஒருவர் (தம் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (‘எனக்கு விருந்தளியுங்கள்’ என்ற பொருள் கொண்ட ‘அக்ரினீ’ எனும் சொல்லைச் சற்று மாற்றி) ‘அக்ரிஃனீ-எனக்கு (ஓர்) இறைவசனத்தை ஓதிக் காட்டுங்கள்’ என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும். மக்களிலேயே ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) தாம் ஏழைகளுக்கு அதிகமாக உதவுபவராவார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டிலிருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத நெய் (அல்லது தேன்) பையை எங்களிடம் கொண்டு வருவார். அதை நாங்கள் பிளந்து அதில் (ஒட்டிக்கொண்டு) இருப்பதை நாக்கால் வழித்து உண்போம்.53
Book :70
(புகாரி: 5432)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شَيْبَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي الفُدَيْكِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ
«كُنْتُ أَلْزَمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِشِبَعِ بَطْنِي، حِينَ لاَ آكُلُ الخَمِيرَ وَلاَ أَلْبَسُ الحَرِيرَ، وَلاَ يَخْدُمُنِي فُلاَنٌ وَلاَ فُلاَنَةُ، وَأُلْصِقُ بَطْنِي بِالحَصْبَاءِ، وَأَسْتَقْرِئُ الرَّجُلَ الآيَةَ، وَهِيَ مَعِي، كَيْ يَنْقَلِبَ بِي فَيُطْعِمَنِي، وَخَيْرُ النَّاسِ لِلْمَسَاكِينِ جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ، يَنْقَلِبُ بِنَا فَيُطْعِمُنَا مَا كَانَ فِي بَيْتِهِ، حَتَّى إِنْ كَانَ لَيُخْرِجُ إِلَيْنَا العُكَّةَ لَيْسَ فِيهَا شَيْءٌ، فَنَشْتَقُّهَا فَنَلْعَقُ مَا فِيهَا»
சமீப விமர்சனங்கள்