பாடம் : 3 இறகு இல்லாத அம்பின் பக்கவாட்டினால் வேட்டையாடப்பட்ட பிராணி.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடியக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.
நான், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே’ என்று பதிலளித்தார்கள்.
நான், ‘நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகளின் மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது (தன்னுடைய முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்’ என்ற கூறினார்கள்.
Book : 72
(புகாரி: 5477)بَابُ مَا أَصَابَ المِعْرَاضُ بِعَرْضِهِ
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نُرْسِلُ الكِلاَبَ المُعَلَّمَةَ؟ قَالَ: «كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ» قُلْتُ: وَإِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ؟ قَالَ: «كُلْ مَا خَزَقَ، وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ»
சமீப விமர்சனங்கள்