தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5493

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 (இஹ்ராம் கட்டியுள்ள) உங்களுக்கும் இதர பயணிகளுக்கும் பயன் தரும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனும் (5:96ஆவது) வசனத் தொடர். உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸைதுல் பஹ்ர்’ (கடல்வேட்டை) எனும் சொல், வேட்டையாடப்பட்ட பிராணியையும் வ தஆமுஹு’ (அதன் உணவு) என்பது, கரையில் ஒதுங்கிய (மீன் முத-ய)வற்றையும் குறிக்கும். அபூபக்ர் (ரலி) அவர்கள், செத்துப் போய் (நீரில்) மிதக்கும் உயிரினமும் அனுமதிக்கப்பட்டதே என்று கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், வ தஆமுஹு’ (அதன் உணவு) என்பது கட-ன் செத்த பிராணியைக் குறிக்கும். அவற்றில் நீ அருவருப்பாகக் கருதுவதைத் தவிர; விலாங்கு மீனை யூதர்கள் உண்ண மாட்டார்கள். ஆனால், நாம் அதை உண்போம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழரான ஷுரைஹ் (ரலி) அவர்கள், கடலில் உள்ளவை அனைத்தும் அறுக்கப்பட்ட(தைப் போன்ற)வை தாம் என்று சொன்னார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் (கடல்) பறவைகளை அறுக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று கூறினார்கள். இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், ஆறுகள் மற்றும் வெள்ளப் பெருக்கினால் நிரம்பிய குளங்குட்டைகள் ஆகியவற்றின் வேட்டை(களான மீன் வகை)கள் கடல் வேட்டைப் பிராணிகளில் அடங்குமா? என்று கேட்டேன். அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். பிறகு இ(ந்த ஆற்று நீரான)து மதுரமானதும் குடிப்பதற்கு சுலபமானதும் ஆகும். இ(ந்தக் கடல் நீரான)து உவர்ப்பானதும் (தொண்டையைக்) கரகரக்கச் செய்யக் கூடியதும் ஆகும். (இருப்பினும்,) இந்த இரண்டிலிருந்தும் நீங்கள் புத்தம் புதிய (மீன்) இறைச்சியை உண்கிறீர்கள் எனும் (35:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் ளஅல்லது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள்ன நீர் நாயின் தோலால் ஆன சேணம் பூட்டிய வாகனத்தின் மீது பயணம் செய்துள்ளார்கள். ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், என் வீட்டார் தவளைகளை உண்ணத் தயாராயிருந்திருந்தால் அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்திருப்பேன் என்று சொன்னார்கள். ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் ஆமையை உண்பதைத் தவறாகக் கருதவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், கடல் வேட்டைப் பிராணிகளை உண்ணலாம்; அதைப் பிடித்தவர் யூதராகவோ, கிறிஸ்தவ ராகவோ, (அக்னி ஆராதனை புரியும்) மஜூஸியாகவோ இருந்தாலும் சரி என்று சொன்னார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், முரீ’ எனும் (போதை நீங்கிய) பானத்தைப் பற்றிக் கூறும் போது, மீன்களும் சூரிய வெப்பமும் இந்த மதுவை (போதையிழக்கச் செய்து) அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டன என்று சொன்னார்கள்.15

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

‘கருவேல இலை’ (‘கபத்’) படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். (எங்களுக்கு) அபூ உபைதா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது ‘அம்பர்’ என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அபூ உபைதா(ரலி) அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். வாகனத்தில் செல்பவர் அதன் கீழிருந்து சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.)

Book : 72

(புகாரி: 5493)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {أُحِلَّ لَكُمْ صَيْدُ البَحْرِ} [المائدة: 96]

وَقَالَ عُمَرُ: صَيْدُهُ مَا اصْطِيدَ، وَ {طَعَامُهُ} [عبس: 24]: مَا رَمَى بِهِ وَقَالَ أَبُو بَكْرٍ: الطَّافِي حَلاَلٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «طَعَامُهُ مَيْتَتُهُ، إِلَّا مَا قَذِرْتَ مِنْهَا، وَالجِرِّيُّ لاَ تَأْكُلُهُ اليَهُودُ، وَنَحْنُ نَأْكُلُهُ» وَقَالَ شُرَيْحٌ، صَاحِبُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ شَيْءٍ فِي البَحْرِ مَذْبُوحٌ» وَقَالَ عَطَاءٌ: «أَمَّا الطَّيْرُ فَأَرَى أَنْ يَذْبَحَهُ» وَقَالَ ابْنُ جُرَيْجٍ: قُلْتُ لِعَطَاءٍ: ” صَيْدُ الأَنْهَارِ وَقِلاَتِ السَّيْلِ، أَصَيْدُ بَحْرٍ هُوَ؟ قَالَ: نَعَمْ، ثُمَّ تَلاَ: {هَذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَذَا مِلْحٌ أُجَاجٌ وَمِنْ كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا} [فاطر: 12] وَرَكِبَ الحَسَنُ، عَلَيْهِ السَّلاَمُ عَلَى سَرْجٍ مِنْ جُلُودِ كِلاَبِ المَاءِ وَقَالَ الشَّعْبِيُّ: «لَوْ أَنَّ أَهْلِي أَكَلُوا الضَّفَادِعَ لَأَطْعَمْتُهُمْ» وَلَمْ يَرَ الحَسَنُ، بِالسُّلَحْفَاةِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «كُلْ مِنْ صَيْدِ البَحْرِ نَصْرَانِيٍّ أَوْ يَهُودِيٍّ أَوْ مَجُوسِيٍّ» وَقَالَ أَبُوالدَّرْدَاءِ، فِي المُرِي: «ذَبَحَ الخَمْرَ النِّينَانُ وَالشَّمْسُ»

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّهُ سَمِعَ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ

«غَزَوْنَا جَيْشَ الخَبَطِ، وَأُمِّرَ أَبُوعُبَيْدَةَ، فَجُعْنَا جُوعًا شَدِيدًا، فَأَلْقَى البَحْرُ حُوتًا مَيِّتًا لَمْ يُرَ مِثْلُهُ، يُقَالُ لَهُ العَنْبَرُ، فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ، فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ عَظْمًا مِنْ عِظَامِهِ، فَمَرَّ الرَّاكِبُ تَحْتَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.