தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5501

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 (கூர்மையான) மூங்கில் கழி, வெள்ளைக் கல், இரும்பு ஆகியவற்றால் அறுக்கப் பட்டவை.24

 அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் இப்னு மாலிக்(ரஹ்) கூறினார்

என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: எங்கள் பணிப்பெண் ஒருவர் ‘சல்உ’ எனுமிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது தம் ஆடுகளில் ஒன்று சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்தார். உடனே ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்துவிட்டார். (விவரம் அறிந்த) நான் என் வீட்டாரிடம், ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி நான் கேட்கும் வரை’ அல்லது ‘நபி(ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இது குறித்துக் கேட்கும் வரை’ (இதைச்) சாப்பிடாதீர்கள்’ என்று சொன்னேன்.

பிறகு ‘நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்’ அல்லது ‘அவர்களிடம் ஆளனுப்பி வைத்தேன்’. அப்போது நபி(ஸல்) அவர்கள் அதைச் சாப்பிடுமாறு உத்தரவிட்டார்கள்.

Book : 72

(புகாரி: 5501)

بَابُ مَا أَنْهَرَ الدَّمَ مِنَ القَصَبِ وَالمَرْوَةِ وَالحَدِيدِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، سَمِعَ ابْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، يُخْبِرُ ابْنَ عُمَرَ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ

أَنَّ جَارِيَةً لَهُمْ كَانَتْ تَرْعَى غَنَمًا بِسَلْعٍ، فَأَبْصَرَتْ بِشَاةٍ مِنْ غَنَمِهَا مَوْتًا، فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا، فَقَالَ لِأَهْلِهِ: لاَ تَأْكُلُوا حَتَّى  آتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْأَلَهُ – أَوْ حَتَّى أُرْسِلَ إِلَيْهِ مَنْ يَسْأَلُهُ – «فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ بَعَثَ إِلَيْهِ – فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَكْلِهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.