ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
முஆத் இப்னு ஸஅத்(ரலி) அல்லது ஸஅத் இப்னு முஆத்(ரலி) கூறினார்
கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் ‘சல்உ’ எனும் மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஓர் ஆடு காயமுற்றது. உடனே அதைப் பிடித்து (கூர்மையான) கல் ஒன்றால் அப்பெண் அறுத்தார். (இது குறித்து) நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘அதை நீங்கள் உண்ணலாம்’ என்று கூறினார்கள்.
Book :72
(புகாரி: 5505)حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ رَجُلٍ، مِنَ الأَنْصَارِ، عَنْ مُعَاذِ بْنِ سَعْدٍ أَوْ سَعْدِ بْنِ مُعَاذٍ، أَخْبَرَهُ
أَنَّ جَارِيَةً لِكَعْبِ بْنِ مَالِكٍ كَانَتْ تَرْعَى غَنَمًا بِسَلْعٍ، فَأُصِيبَتْ شَاةٌ مِنْهَا، فَأَدْرَكَتْهَا فَذَبَحَتْهَا بِحَجَرٍ، فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كُلُوهَا»
சமீப விமர்சனங்கள்