தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5508

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 வேதக்காரர்கள் அறுத்த பிராணிகளையும் அவற்றின் கொழுப்பையும் உண்ணலாம். அவர்கள் பகைநாட்டினராயினும், மற்றவர் களாயினும் சரியே. அல்லாஹ் கூறுகின்றான்: இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்கப் பட்டவையாக (ஹலாலாக) ஆக்கப்பட்டுள் ளன. வேதம் வழங்கப்பெற்றவர்களின் உணவு உங்களுக்கும், உங்கள் உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (5:5) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அரபுக் கிறிஸ்தவர்கள் அறுத்த பிராணிகளை உண்பது தவறன்று. அல்லாஹ் அல்லாத வற்றின் பெயரால் அவை அறுக்கப்பட்டிருப்ப தாகக் கேள்விப்பட்டால் அதை உண்ண வேண்டாம். அப்படி கேள்விப்படவில்லை யென்றால் அல்லாஹ் அதை நமக்கு அனுமதித்துள்ளான். அவன் அவர்களுடைய இறைமறுப்பை அறிந்தும் உள்ளான். அலீ (ரலி) அவர்களைக் குறித்தும் இவ்வாறே (அவர்கள் கூறியதாக)அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும், விருத்த சேதனம் (சுன்னத்) செய்யப்படாத வரால் அறுக்கப்பட்ட பிராணியை உண்பதில் தவறில்லை என்று கூறுகிறார்கள்.31 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (5:5ஆவது வசனத்திலுள்ள)அவர்களுடைய உணவு’ என்பது அவர்களால் அறுக்கப்பட்ட பிராணிகளைக் குறிக்கும் என்று கூறுகிறார்கள்.

 அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்

நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் கொழுப்பு நிரம்பிய தோல் பை ஒன்றை எறிந்தார். அதை எடுக்க நான் பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்க்க, அங்கே நபி(ஸல்) அவர்கள் (நின்று கொண்டு) இருந்தார்கள். (என் ஆசை அவர்களுக்குத் தெரிந்துவிட்டால்) அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.

Book : 72

(புகாரி: 5508)

بَابُ ذَبَائِحِ أَهْلِ الكِتَابِ وَشُحُومِهَا، مِنْ أَهْلِ الحَرْبِ وَغَيْرِهِمْ

وَقَوْلِهِ تَعَالَى: {اليَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ} [المائدة: 5] وَقَالَ الزُّهْرِيُّ: ” لاَ بَأْسَ بِذَبِيحَةِ نَصَارَى العَرَبِ، وَإِنْ سَمِعْتَهُ يُسَمِّي لِغَيْرِ اللَّهِ فَلاَ تَأْكُلْ، وَإِنْ لَمْ تَسْمَعْهُ فَقَدْ أَحَلَّهُ اللَّهُ لَكَ وَعَلِمَ كُفْرَهُمْ  وَيُذْكَرُ عَنْ عَلِيٍّ، نَحْوُهُ وَقَالَ الحَسَنُ، وَإِبْرَاهِيمُ: «لاَ بَأْسَ بِذَبِيحَةِ الأَقْلَفِ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” طَعَامُهُمْ: ذَبَائِحُهُمْ

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لِآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَحْيَيْتُ مِنْهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.