தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5566

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 ஒருவர் தமது தியாகப் பிராணியை (ஹஜ்ஜில்) அறுப்பதற்காக அனுப்பி வைப்பதால் அவர் மீது எந்தத் தடையும் விதிக்கப்படாது.22

 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) கூறினார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, ‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! ஒருவர் தம் தியாகப் பிராணியை கஅபாவிற்கு (வேறொருவர் மூலம்) அனுப்பிவிட்டு (தம்) ஊரில் உட்கார்ந்துகொள்கிறார். தம் அந்த ஒட்டகத்திற்கு (அது தியாகப் பிராணி என்பதைக் காட்டும் அடையாளமாக) கழுத்தில் மாலை கட்டித் தொங்கவிடப்பட வேண்டுமென்றும் சொல்லி அனுப்புகிறார். அந்த நாளிலிருந்து மக்கள் (ஹாஜிகள்) இஹ்ராமிலிருந்து விடுபடும் நாள் வரை தாமும் இஹ்ராம் கட்டியவராகவே நடந்து கொள்கிறார் (என்றால் அவருக்கான சட்டம் என்ன?)’ என்று கேட்டேன்.

அப்போது ஆயிஷா(ரலி) (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை கேட்டேன். (தொடர்ந்து) அவர்கள், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தியாகப் பிராணிகளுடைய கழுத்து மாலைகளைக் கோத்துவந்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் (இந்தத்) தியாகப் பிராணிகளை (ஹஜ் பருவத்தில்) கஅபாவிற்கு அனுப்புவார்கள். எனினும், அவர்களின் குடும்பத்திலிருந்த மற்ற ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் எதுவுமே மக்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பும் வரை அவர்களுக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கவில்லை’ என்று கூறினார்கள்.23

Book : 73

(புகாரி: 5566)

بَابُ إِذَا بَعَثَ بِهَدْيِهِ لِيُذْبَحَ لَمْ يَحْرُمْ عَلَيْهِ شَيْءٌ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ مَسْرُوقٍ

أَنَّهُ أَتَى عَائِشَةَ، فَقَالَ لَهَا: يَا أُمَّ المُؤْمِنِينَ، إِنَّ رَجُلًا يَبْعَثُ بِالهَدْيِ إِلَى الكَعْبَةِ وَيَجْلِسُ فِي المِصْرِ، فَيُوصِي أَنْ تُقَلَّدَ بَدَنَتُهُ، فَلاَ يَزَالُ مِنْ ذَلِكِ اليَوْمِ مُحْرِمًا حَتَّى يَحِلَّ النَّاسُ، قَالَ: فَسَمِعْتُ تَصْفِيقَهَا مِنْ وَرَاءِ الحِجَابِ، فَقَالَتْ: لَقَدْ «كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَبْعَثُ هَدْيَهُ إِلَى الكَعْبَةِ، فَمَا يَحْرُمُ عَلَيْهِ مِمَّا حَلَّ لِلرِّجَالِ مِنْ أَهْلِهِ، حَتَّى يَرْجِعَ النَّاسُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.