பாடம் : 10 பாதக்’ எனும் பானமும், போதை தரும் அனைத்துப் பானங்களுக்கும் தடை விதிப்போரின் கூற்றும்.22 மூன்றில் (இரு பங்கு குறைந்து) ஒரு பங்கு இருக்கும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை (திலா’) அருந்தலாம் என உமர் பின் கத்தாப், அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ், முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கருதினர். பராஉ பின் ஆஸிப், அபூஜுஹைஃபா (ரலி) ஆகியோர் சரி பாதியளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை அருந்தியுள்ளனர். காய்ச்சப்படாத (பச்சைப்) பழச்சாற்றை அருந்தலாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.23 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (என் மகன்) உபைதுல்லாஹ்விடமி ருந்து ஒரு பானத்தின் நெடி வரக் கண்டேன். அது குறித்து விசாரிப்பேன். அது போதை தருவதாக இருந்தால் அவருக்குக் கசையடி கொடுப்பேன்.24
அபுல் ஜுவைரியா(ரஹ்) கூறினார்
நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘பாதக்’ எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(இவர்கள் மதுவுக்கு) ‘பாதக்’ எனும் புதுப பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என) முஹம்மத்(ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். எனவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டதுதான்’ என்று பதிலளித்தார்கள்.
நான், ‘(பாதக் எனும் கெட்டியாகக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாறு) அனுமதிக்கப்பட்ட நல்ல பானமாயிற்றே!’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அனுமதிக்கப்பட்ட நல்ல பொருளுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட கெட்ட பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று கூறினார்கள்.
Book : 74
(புகாரி: 5598)بَابُ البَاذَقِ، وَمَنْ نَهَى عَنْ كُلِّ مُسْكِرٍ مِنَ الأَشْرِبَةِ
وَرَأَى عُمَرُ، وَأَبُو عُبَيْدَةَ، وَمُعَاذٌ، «شُرْبَ الطِّلاَءِ عَلَى الثُّلُثِ» وَشَرِبَ البَرَاءُ، وَأَبُو جُحَيْفَةَ، عَلَى النِّصْفِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «اشْرَبِ العَصِيرَ مَا دَامَ طَرِيًّا» وَقَالَ عُمَرُ: «وَجَدْتُ مِنْ عُبَيْدِ اللَّهِ رِيحَ شَرَابٍ، وَأَنَا سَائِلٌ عَنْهُ، فَإِنْ كَانَ يُسْكِرُ جَلَدْتُهُ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الجُوَيْرِيَةِ، قَالَ
سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ، عَنِ البَاذَقِ فَقَالَ: سَبَقَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَاذَقَ: «فَمَا أَسْكَرَ فَهُوَ حَرَامٌ» قَالَ: الشَّرَابُ الحَلاَلُ الطَّيِّبُ، قَالَ: «لَيْسَ بَعْدَ الحَلاَلِ الطَّيِّبِ إِلَّا الحَرَامُ الخَبِيثُ»
சமீப விமர்சனங்கள்