உம்முல் ஃபள்ல்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) ‘அரஃபா’ (துல்ஹஜ் 9ஆம்) நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைதீ(ரஹ்) கூறினார்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) சில வேளைகளில் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அரஃபா’ நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா (இல்லையா) என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, உம்முல் ஃபள்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு கிண்ணத்தில் பாலை) அனுப்பிவைத்தார்கள்’ என்று (‘உம்முல் பள்ல்(ரலி) அவர்களிடமிருந்து இதைத் தாம் கேட்டதாகச் சொல்லாமல்) நேரடியாக அறிவித்ததுண்டு. அவர்களிடம், ‘இது (அறிவிப்பாளர் தொடரில் முறிவு ஏற்படாத) மவ்ஸூலா(ன ஹதீஸா)? அல்லது (அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டுள்ள) முர்ஸலா(ன ஹதீஸா)?’ என்று கேட்கப்பட்டால், ‘இதை உம்முல் ஃபள்ல்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறேன். (எனவே, இது ‘மவ்ஸூல்’ தான்)’ என்று பதிலளிப்பார்கள்.
Book :74
(புகாரி: 5604)حَدَّثَنَا الحُمَيْدِيُّ، سَمِعَ سُفْيَانَ، أَخْبَرَنَا سَالِمٌ أَبُو النَّضْرِ، أَنَّهُ سَمِعَ عُمَيْرًا، مَوْلَى أُمِّ الفَضْلِ، يُحَدِّثُ عَنْ أُمِّ الفَضْلِ، قَالَتْ
«شَكَّ النَّاسُ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلْتُ إِلَيْهِ بِإِنَاءٍ فِيهِ لَبَنٌ فَشَرِبَ»، فَكَانَ سُفْيَانُ رُبَّمَا قَالَ: «شَكَّ النَّاسُ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلَتْ إِلَيْهِ أُمُّ الفَضْلِ» فَإِذَا وُقِّفَ عَلَيْهِ، قَالَ: هُوَ عَنْ أُمِّ الفَضْلِ
சமீப விமர்சனங்கள்