பாடம் : 20 தொட்டியில் வாய் வைத்துப் பருகுவது.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூ பக்ர்) உடன் அன்சாரி ஒருவரிடம் (அவரின் தோட்டத்திற்குச்) சென்றார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழரும் (அந்த அன்சாரிக்கு) ‘சலாம்’ (முகமன்) கூறினர். அந்த அன்சாரி பதில் சலாம் சொல்லிவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இது வெப்பமான வேளை!’ என்றார். அப்போது அவர் தம் தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘இரவில் தோல் பையில் (ஊற்றி) வைத்த தண்ணீர் உம்மிடம் இருந்தால் (எங்களுக்குத் தாருங்கள்). இல்லாவிட்டால் நாங்கள் (இரைத்து ஊற்றப்பட்டுள்ள இந்த நீரைத் தொட்டியில்) வாய்வைத்துக் குடித்துக்கொள்கிறோம்’ என்று கூறினார்கள்.
(தம்) தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அந்த அன்சாரி, ‘இறைத்தூதர் அவர்களேஸ இரவில் தோல் பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் என்னிடம் உள்ளது’ என்று கூறியபடி பந்தலை நோக்கி நடந்தார். பின்னர் அவர் கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன் மீது தம் வீட்டு ஆட்டிலிருந்து பால் கறந்து (அதில் கலந்து)விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அதைப்) பரும்னார்கள்.
பிறகு மறுபடியும் அவர் கொண்டு வந்தார். (அதை) நபி(ஸல்) அவர்களுடன் வந்திருந்த மனிதர் பரும்னார்.42
Book : 74
(புகாரி: 5621)بَابُ الكَرْعِ فِي الحَوْضِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَمَعَهُ صَاحِبٌ لَهُ، فَسَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَاحِبُهُ، فَرَدَّ الرَّجُلُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، وَهِيَ سَاعَةٌ حَارَّةٌ، وَهُوَ يُحَوِّلُ فِي حَائِطٍ لَهُ، يَعْنِي المَاءَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كَانَ عِنْدَكَ مَاءٌ بَاتَ فِي شَنَّةٍ، وَإِلَّا كَرَعْنَا» وَالرَّجُلُ يُحَوِّلُ المَاءَ فِي حَائِطٍ، فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ، عِنْدِي مَاءٌ بَاتَ فِي شَنَّةٍ، فَانْطَلَقَ إِلَى العَرِيشِ، فَسَكَبَ فِي قَدَحٍ مَاءً، ثُمَّ حَلَبَ عَلَيْهِ مِنْ دَاجِنٍ لَهُ، فَشَرِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَعَادَ فَشَرِبَ الرَّجُلُ الَّذِي جَاءَ مَعَهُ
சமீப விமர்சனங்கள்