பாடம் : 20 இஷாத் தொழுகையை அத்தமா’ எனவும் குறிப்பிடலாம்.
நயவஞ்சகர் (முனாஃபிக்)களுக்கு பெரும் சுமையான தொழுகை இஷாவும் ஃபஜ்ருமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்தமாவிலும் ஃபஜ்ரிலும் உள்ள (மகத்துவத்)தை மக்கள் அறிவார்களானால் (அவ்விரண்டுக்கும் தவழ்ந்தாவது வந்து சேர்ந்துவிடுவார்கள்) என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (காண்க : ஹதீஸ் எண்-615)
அபூஅப்தில்லாஹ் புகாரீ(யாகிய நான்) கூறுகின்றேன்: (24:58ஆவது வசனத்தில்) அல்லாஹ், இஷாத் தொழுகைக்குப் பின்… என்று குறிப்பிடுவதால் இஷா’ எனக் குறிப்பிடுவதே சிறப்பாகும்.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது: நாங்கள் இஷாத் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களிடம் முறை வைத்துச் செல்பவர்களாக இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஷாவை அத்தமாவாக (அதாவது பிற்படுத்தித் தொழு(வித்)தார்கள். (காண்க : ஹதீஸ் எண்-567)
இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), ஆகியோர் கூறுகின்றனர் : நபி (ஸல்) அவர்கள் இஷாவை அத்தமாவாக (பிற்படுத்தி)த் தொழுதார்கள். அத்தமாதொழுகையை நபி (ஸல்) அவர்கள் பிற்படுத்தித் தொழுதார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஷாவை (சிலநேரம் முன்னேரத்திலும்) தொழுபவர்களாக இருந்தார்கள். (காண்க: ஹதீஸ் எண்-560)
அபூபர்ஸா (நள்ரா பின் உபைத்-ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஷாவைப் பிற்படுத்து (வதையே விரும்பு)வார்கள். (காண்க: ஹதீஸ் எண்-547)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் இறுதி இஷாவை பிற்படுத்துபவர்களாக இருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி), அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிபையும் இஷாவையும் தொழுதார்கள். (மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து இஷாத் தொழுகையை அத்தமா தொழுகை எனவும் இஷாத் தொழுகை எனவும் கூறலாம் என்று தெரிகின்றது).
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள், மக்களால் ‘அதமா’ எனக் கூறப்பட்டு வந்த இஷாத் தொழுகையை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்து எங்களை நோக்கி ‘இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பூமியின் மேற்பரப்பில் இருக்கும் எவரும் இந்த இரவிலிருந்து நூறாவது ஆண்டின் துவக்கத்தில் வாழ மாட்டார்கள்’ எனக் குறிப்பிட்டார்கள்.
Book : 9
بَابُ ذِكْرِ العِشَاءِ وَالعَتَمَةِ، وَمَنْ رَآهُ وَاسِعًا
قَالَ أَبُو هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَثْقَلُ الصَّلاَةِ عَلَى المُنَافِقِينَ العِشَاءُ وَالفَجْرُ» وَقَالَ: «لَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالفَجْرِ»
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” وَالِاخْتِيَارُ: أَنْ يَقُولَ العِشَاءُ، لِقَوْلِهِ تَعَالَى: {وَمِنْ بَعْدِ صَلاَةِ العِشَاءِ} [النور: 58] ” وَيُذْكَرُ عَنْ أَبِي مُوسَى، قَالَ: «كُنَّا نَتَنَاوَبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ صَلاَةِ العِشَاءِ فَأَعْتَمَ بِهَا» وَقَالَ ابْنُ عَبَّاسٍ، وَعَائِشَةُ: «أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعِشَاءِ» وَقَالَ بَعْضُهُمْ، عَنْ عَائِشَةَ: «أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعَتَمَةِ» وَقَالَ جَابِرٌ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي العِشَاءَ» وَقَالَ أَبُو بَرْزَةَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَخِّرُ العِشَاءَ» وَقَالَ أَنَسٌ: «أَخَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ الآخِرَةَ» وَقَالَ ابْنُ عُمَرَ، وَأَبُو أَيُّوبَ، وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ: «صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَغْرِبَ وَالعِشَاءَ»
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: سَالِمٌ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، قَالَ
صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً صَلاَةَ العِشَاءِ، وَهِيَ الَّتِي يَدْعُو النَّاسُ العَتَمَةَ، ثُمَّ انْصَرَفَ فَأَقْبَلَ عَلَيْنَا، فَقَالَ: «أَرَأَيْتُمْ لَيْلَتَكُمْ هَذِهِ، فَإِنَّ رَأْسَ مِائَةِ سَنَةٍ مِنْهَا، لاَ يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ»
சமீப விமர்சனங்கள்