பாடம் : 5 ஒட்டகப் பாலால் சிகிச்சையளிப்பது
அனஸ்(ரலி) கூறினார்
(மதீனா வந்த ‘உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்’ என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது ‘மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை’ என்று கூறினர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த ‘அல்ஹர்ரா’ எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச் செய்து, ‘இவற்றின் பாலை அருந்துங்கள்’ என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்) அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச் சென்றுவிட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள், அந்த ஆட்களைப் பின்தொடர்ந்து செல்லும்படி (ஒரு படைப்பிரிவை) அனுப்பி (அவர்களைப் பிடித்து வரச் செய்து கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களின் கால்களையும் கைகளையும் துண்டித்து அவர்களின் கண்களில் சூடிட்டார்கள். அவர்களில் ஒருவர் இறக்கும் வரை தன்னுடைய நாவால் தரையை நக்கியபடி இருந்ததை பார்த்தேன்.7
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சல்லாம் இப்னு மிஸ்கீன்(ரஹ்) கூறினார்
அனஸ்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ‘நபி(ஸல்) அவர்கள் வழங்கிய தண்டனைகளிலேயே கடுமையான தண்டனை எது என்று எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கேட்டதாகவும், அப்போது இந்த ஹதீஸை அவரிடம் அனஸ்(ரலி) தெரிவித்ததாகவும் எனக்குத் தகவல் எட்டியது. ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்களுக்கு இச்செய்தி கிடைத்தபோது ‘(ஹஜ்ஜாஜ் இதைத் தமக்குச் சாதமாக்கிச் கொள்வார் என்பதால்) அவருக்கு இதை அனஸ்(ரலி) தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டுமென விரும்பினேன்’ என்று கூறினார்கள்.
Book : 76
(புகாரி: 5685)بَابُ الدَّوَاءِ بِأَلْبَانِ الإِبِلِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا سَلَّامُ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ
أَنَّ نَاسًا كَانَ بِهِمْ سَقَمٌ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ آوِنَا وَأَطْعِمْنَا، فَلَمَّا صَحُّوا، قَالُوا: إِنَّ المَدِينَةَ وَخِمَةٌ، فَأَنْزَلَهُمُ الحَرَّةَ فِي ذَوْدٍ لَهُ، فَقَالَ: «اشْرَبُوا أَلْبَانَهَا» فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَاقُوا ذَوْدَهُ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَرَ أَعْيُنَهُمْ، فَرَأَيْتُ الرَّجُلَ مِنْهُمْ يَكْدِمُ الأَرْضَ بِلِسَانِهِ حَتَّى يَمُوتَ قَالَ سَلَّامٌ: فَبَلَغَنِي أَنَّ الحَجَّاجَ قَالَ لِأَنَسٍ: حَدِّثْنِي بِأَشَدِّ عُقُوبَةٍ عَاقَبَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَدَّثَهُ بِهَذَا فَبَلَغَ الحَسَنَ، فَقَالَ: «وَدِدْتُ أَنَّهُ لَمْ يُحَدِّثْهُ بِهَذَا»
சமீப விமர்சனங்கள்