பாடம் : 18 கண்நோய்க்காக அஞ்சனக்கல் மற்றும் அஞ்சனத்தைப் பயன்படுத்துதல்.29 இது குறித்து உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது.30
உம்மு ஸலமா(ரலி) கூறினார்
ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். (அதற்காக ‘இத்தா’ இருக்கும்போது) அப்பெண்ணுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்பெண்ணைப் பற்றி மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டு, ‘அவளுடைய கண் பழுதாம்விடும் அபயாமிருப்பதால் அவள் (கண்ணில் சிகிச்சைக்காக) அஞ்சனம் தீட்டிக் கொள்ளலாமா?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘(அறியாமைக் காலத்தில்) உங்களில் ஒருத்தி (தன் கணவன் இறந்தபின்) ‘மோசமான ஆடையணிந்தவளாக தன் வீட்டில் தங்கியிருப்பாள்’ அல்லது ‘மோசமான வீட்டில் சாதாரண ஆடை அணிந்தவளாக (ஆண்டு முழுவதும்) தங்கியிருப்பாள்’ (ஓராண்டு கழிந்தபின் அவ்வழியாக) ஏதேனும் ஒரு நாய் கடந்து சென்றால் அதன் மீது ஒட்டகச் சாணத்தை வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் (கழியும்வரை) அஞ்சனம் இடவேண்டாம். 31 என்று பதில் கூறினார்கள்.
Book : 76
(புகாரி: 5706)بَابُ الإِثْمِدِ وَالكُحْلِ مِنَ الرَّمَدِ
فِيهِ عَنْ أُمِّ عَطِيَّةَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدُ بْنُ نَافِعٍ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ امْرَأَةً تُوُفِّيَ زَوْجُهَا، فَاشْتَكَتْ عَيْنَهَا، فَذَكَرُوهَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَكَرُوا لَهُ الكُحْلَ، وَأَنَّهُ يُخَافُ عَلَى عَيْنِهَا، فَقَالَ: ” لَقَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَمْكُثُ فِي بَيْتِهَا، فِي شَرِّ أَحْلاَسِهَا – أَوْ: فِي أَحْلاَسِهَا فِي شَرِّ بَيْتِهَا – فَإِذَا مَرَّ كَلْبٌ رَمَتْ بَعْرَةً، فَهَلَّا، أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
சமீப விமர்சனங்கள்