தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5712

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் நோயுற்று (மயக்கமடைந்து) இருந்தபோது அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் மருந்து ஊற்ற வேண்டாம் என்று எங்களுக்கு சைகை செய்யலானார்கள்.

‘நோயாளி மருந்தை வெறுப்பது போன்றே (நபி அவர்களும் வெறுக்கிறார்கள்; ஊற்றவேண்டாமெனத் தடை செய்யவில்லை)’ என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.

அவர்கள் மயக்கத்திலிருந்து (முழுமையாகத்) தெளிந்தபோது ‘என் வாயில் மருந்து ஊற்றவேண்டாமென்று நான் உங்களைத் தடுக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘ஆம். ஆனால், நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நீங்களும் வெறுக்கிறீர்கள் என நினைத்தோம்)’ என்று கூறினோம். நபி(ஸல்) அவர்கள், ‘நான் பார்த்துககொண்டிருக்கும்போதே ஒருவர் பாக்கியில்லாமல் வீட்டிலுள்ள அனைவரின் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும். அப்பாஸ் அவர்களைத் தவிர. ஏனெனில், (வாயில் மருந்து ஊற்றும்போது) உங்களுடன் அவர் இருக்கவில்லை’ என்று கூறினார்கள்.38

Book :76

(புகாரி: 5712)

قَالَ: وَقَالَتْ عَائِشَةُ

لَدَدْنَاهُ فِي مَرَضِهِ فَجَعَلَ يُشِيرُ إِلَيْنَا: «أَنْ لاَ تَلُدُّونِي»، فَقُلْنَا: كَرَاهِيَةُ المَرِيضِ لِلدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ: «أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّونِي؟» قُلْنَا: كَرَاهِيَةَ المَرِيضِ لِلدَّوَاءِ، فَقَالَ: «لاَ يَبْقَى فِي البَيْتِ أَحَدٌ إِلَّا لُدَّ وَأَنَا أَنْظُرُ إِلَّا العَبَّاسَ، فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.