பாடம் : 24 வயிற்றுப் போக்கு மருந்து44
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘என் சகோரருக்குத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருந்து வருகிறது’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவரும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். பிறகு அவர் வந்து, ‘என் சகோதரருக்குத் தேன் ஊட்டினேன்; ஆனால், அது அவருக்கு வயிற்றுப் போக்கை அதிகமாக்கவே செய்தது’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உண்மை சொன்னான். உன் சகோதரரின் வயிறுதான் பொய் பேசியது’ என்று பதில் கூறினார்கள். 45
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 76
(புகாரி: 5716)بَابُ دَوَاءِ المَبْطُونِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أَخِي اسْتَطْلَقَ بَطْنُهُ، فَقَالَ: «اسْقِهِ عَسَلًا» فَسَقَاهُ فَقَالَ: إِنِّي سَقَيْتُهُ فَلَمْ يَزِدْهُ إِلَّا اسْتِطْلاَقًا، فَقَالَ: «صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ»
تَابَعَهُ النَّضْرُ، عَنْ شُعْبَةَ
சமீப விமர்சனங்கள்