தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5792

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 குஞ்சம் வைத்த கீழங்கி9 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), அபூபக்ர் பின் முஹம்மத் (ரஹ்), ஹம்ஸா பின் அபீஉசைத் (ரஹ்), முஆவியா பின் அப்தில்லாஹ் பின் ஜஅஃபர் (ரஹ்) ஆகியோர் குஞ்சம் வைத்த ஆடைகளை அணிந்தார்கள் என்று கூறப்படுகிறது.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), இருக்க நான் (அங்கு) அமர்ந்திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் வந்தார். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ரிஃபாஆ அவர்களின் மனைவியாக இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே, நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அவர்களை மணமுடித்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றது தான், இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லிவிட்டுத் தம் முகத்திரையின் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.

காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி) இச்சொல்லை வாசலில் நின்ற படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத்(ரலி) உள்ளே வர அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது காலித் அவர்கள், ‘அபூ பக்ரே! இவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பம்ரங்கமாக இப்படிப் பேசக்கூடாது என்று நீங்கள் தடுக்கக்கூடாதா?’ என்று (வெளியிலிருந்தவாறே) கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்ததற்கு மேலாக வேறொன்றும் செய்யவில்லை. அப்பெண்ணிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீ (உன் பழைய கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் அது முடியாது’ என்று கூறினார்கள். பிறகு (இவ்விஷயத்தில்) இதுவே (சட்ட) வழிமுறையாகிவிட்டது. 10

Book : 77

(புகாரி: 5792)

بَابُ الإِزَارِ المُهَدَّبِ

وَيُذْكَرُ عَنِ الزُّهْرِيِّ، وَأَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ، وَحَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ، وَمُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ: «أَنَّهُمْ لَبِسُوا ثِيَابًا مُهَدَّبَةً»

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ

جَاءَتْ امْرَأَةُ رِفَاعَةَ القُرَظِيِّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسَةٌ، وَعِنْدَهُ أَبُو بَكْرٍ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ تَحْتَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ يَا رَسُولَ اللَّهِ إِلَّا مِثْلُ هَذِهِ الهُدْبَةِ، وَأَخَذَتْ هُدْبَةً مِنْ جِلْبَابِهَا، فَسَمِعَ خَالِدُ بْنُ سَعِيدٍ قَوْلَهَا وَهُوَ بِالْبَابِ لَمْ يُؤْذَنْ لَهُ، قَالَتْ: فَقَالَ خَالِدٌ: يَا أَبَا بَكْرٍ، أَلاَ تَنْهَى هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَلاَ وَاللَّهِ مَا يَزِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى التَّبَسُّمِ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لاَ، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ وَتَذُوقِي عُسَيْلَتَهُ» فَصَارَ سُنَّةً بَعْدُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.