தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5806

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

தலைப்பாகைகள்.24

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஹ்ராம் கட்டியவர் சட்டை அணிய மாட்டார்; தலைப்பாகையையும் முழுக்கால் சட்டையையும், முக்காடுள்ள மேலங்கியையும் அணியமாட்டார். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையையும் (மோஸாக்கள் எனும்) காலுறைகளையும் அணியமாட்டார்; காலணிகள் கிடைக்கவில்லையெனில் அவர் (மேலிருந்து) கணுக்கால்களுக்குக் கீழே காலுறை (மோஸா) இருக்கும் படி கத்தரித்து (அணிந்து) கொள்ளட்டும்.

என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். 25

Book : 77

(புகாரி: 5806)

بَابٌ فِي العَمَائِمِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لاَ يَلْبَسُ المُحْرِمُ القَمِيصَ، وَلاَ العِمَامَةَ، وَلاَ السَّرَاوِيلَ، وَلاَ البُرْنُسَ،

وَلاَ ثَوْبًا مَسَّهُ زَعْفَرَانٌ وَلاَ وَرْسٌ، وَلاَ الخُفَّيْنِ إِلَّا لِمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ،

فَإِنْ لَمْ يَجِدْهُمَا فَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.