தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5815 & 5816

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

கெட்டியான ஆடைகளும் (சதுர வடிவிலான) கறுப்புக் கம்பளி ஆடைகளும்.

5815 & 5816. ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவித்தார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தங்களின் கறுப்புக் கம்பளி ஆடையைத் தம் முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தம் முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள்.

அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கினார்கள்’ என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள்.34

Book : 77

(புகாரி: 5815 & 5816)

بَابُ الأَكْسِيَةِ وَالخَمَائِصِ

حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالاَ

لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ كَشَفَهَا عَنْ وَجْهِهِ،

فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.