ஆயிஷா ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) சலாம் கொடுத்தவுடன், ‘என்னுடைய இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள்.
ஏனெனில், சற்று முன்பு அது தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திருப்பிவிட்டது. அபூ ஜஹ்மின் (மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள்.
-அவர் அதீ இப்னு கஅப் குலத்தைச் சேர்ந்த அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைஃபா இப்னி ஃகானிம் என்பவராவார். 35
Book :77
(புகாரி: 5817)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمِيصَةٍ لَهُ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً،
فَلَمَّا سَلَّمَ قَالَ: «اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي، وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ بْنِ غَانِمٍ، مِنْ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ»
சமீப விமர்சனங்கள்