பாடம் : 21
ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு (முழங்கால்களைக் கட்டியபடி) அமர்வது (இஹ்திபா).39
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு விதமாக ஆடை அணிவதைத் தடை செய்தார்கள். மர்ம உறுப்பு வெளியே தெரியும்படி ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பதையும் (இஹ்திபா), ஒரே துணியை (இரண்டு தோள்களில் ஒன்றில்) சுற்றிக்கொண்டு ஒரு பக்கம் துணியில்லாமல் இருப்பதையும் (இஷ்திமால்) தடை செய்தார்கள்.
(வியாபார முறைகளில்) முலாமஸாவையும், முனாபதாவையும் தடை செய்தார்கள்.40
Book : 77
(புகாரி: 5821)بَابُ الِاحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لِبْسَتَيْنِ: أَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي الثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ،
وَأَنْ يَشْتَمِلَ بِالثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى أَحَدِ شِقَّيْهِ،
وَعَنِ المُلاَمَسَةِ وَالمُنَابَذَةِ
சமீப விமர்சனங்கள்