பாடம் : 22
கறுப்பு நிறக் கம்பளி ஆடை.
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டு வரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். மக்கள் (பதில் வறாமல்) மெளனமாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டு வரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும், ‘(இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு’ என்று கூறிவிட்டு, ‘உம்மு காலிதே! இது ‘சனாஹ்’ (அழகாயிருக்கிறது)’ என்றார்கள்.
(நபி(ஸல்) அவர்கள் கூறிய) ‘சனாஹ்’ எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும்.
அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.42
Book : 77
(புகாரி: 5823)بَابُ الخَمِيصَةِ السَّوْدَاءِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ سَعِيدِ بْنِ فُلاَنٍ هُوَ عَمْرُو بْنُ سَعِيدِ بْنِ العَاصِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ
أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ صَغِيرَةٌ، فَقَالَ: «مَنْ تَرَوْنَ أَنْ نَكْسُوَ هَذِهِ» فَسَكَتَ القَوْمُ، قَالَ: «ائْتُونِي بِأُمِّ خَالِدٍ» فَأُتِيَ بِهَا تُحْمَلُ، فَأَخَذَ الخَمِيصَةَ بِيَدِهِ فَأَلْبَسَهَا، وَقَالَ: «أَبْلِي وَأَخْلِقِي» وَكَانَ فِيهَا عَلَمٌ أَخْضَرُ أَوْ أَصْفَرُ، فَقَالَ: «يَا أُمَّ خَالِدٍ، هَذَا سَنَاهْ» وَسَنَاهْ بِالحَبَشِيَّةِ حَسَنٌ
சமீப விமர்சனங்கள்