தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5831

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) மதாயின் (தைஃபூன்) நகரில் இருந்தார்கள். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூஸியான) ஊர்த் தலைவர் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) ‘நான் இவரை(ப் பல முறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்க்காத காரணத்தால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘தங்கம், வெள்ளி, சாதாரணப்பட்டு, அலங்காரப்பட்டு ஆகிய இவையெல்லாம் இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்’ என்றார்கள்’ எனக் கூறினார்கள்.50

Book :77

(புகாரி: 5831)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ

كَانَ حُذَيْفَةُ، بِالْمَدَايِنِ، فَاسْتَسْقَى، فَأَتَاهُ دِهْقَانٌ بِمَاءٍ فِي إِنَاءٍ  مِنْ فِضَّةٍ، فَرَمَاهُ بِهِ

وَقَالَ: إِنِّي لَمْ أَرْمِهِ إِلَّا أَنِّي نَهَيْتُهُ فَلَمْ يَنْتَهِ،

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الذَّهَبُ وَالفِضَّةُ، وَالحَرِيرُ وَالدِّيبَاجُ، هِيَ لَهُمْ فِي الدُّنْيَا، وَلَكُمْ فِي الآخِرَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.