தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5835

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இம்ரான் இப்னு ஹித்தான் (ரஹ்) அவர்கள் கூறினார்:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பட்(டா)டை குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேளுங்கள்’ என்றார்கள். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேட்டேன். அவர்கள், ‘இப்னு உமர் (ரலி) அவர்களைக் கேளுங்கள்’ என்று கூற நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.

அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அபூ ஹஃப்ஸ், அதாவது உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள், ‘மறுமையில் யாருக்கு எந்தப் பங்குமில்லையோ அவர்தாம் இம்மையில் பட்(டா)டை அணிவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.

(இதைக் கேட்ட) நான், ‘உண்மையே சொன்னார்; அபூ ஹஃப்ஸ் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது பொய்யுரைக்கவில்லை’ என்று சொன்னேன்.

இதே ஹதீஸ், இம்ரான் இப்னு ஹித்தான் (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :77

(புகாரி: 5835)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ المُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ، قَالَ

سَأَلْتُ عَائِشَةَ عَنِ الحَرِيرِ فَقَالَتْ: ائْتِ ابْنَ عَبَّاسٍ فَسَلْهُ، قَالَ: فَسَأَلْتُهُ فَقَالَ: سَلْ ابْنَ عُمَرَ، قَالَ: فَسَأَلْتُ ابْنَ عُمَرَ،

فَقَالَ: أَخْبَرَنِي أَبُو حَفْصٍ يَعْنِي عُمَرَ بْنَ الخَطَّابِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا يَلْبَسُ الحَرِيرَ فِي الدُّنْيَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ»

فَقُلْتُ: صَدَقَ، وَمَا كَذَبَ أَبُو حَفْصٍ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ: حَدَّثَنَا حَرْبٌ، عَنْ يَحْيَى، حَدَّثَنِي عِمْرَانُ، وَقَصَّ الحَدِيثَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.