பாடம் : 32
புத்தாடை அணிந்தவருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனை.63
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) கூறினார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டு வரப்பட்டன. அவற்றில் கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அவர்கள், ‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணிவிப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, மக்கள் (பதில் பேசாமல்) மெளனமாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். உடனே (சிறுமியாக இருந்த) நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். உடனே அவர்கள் அந்த ஆடையைத் தம் கையால் எனக்கு அணிவித்து, ‘(இதை நீ உடுத்தி பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு‘ என்று இருமுறை சொன்னார்கள். பிறகு அந்த ஆடையின் வேலைப்பாட்டைக் கவனித்துப் பார்க்கலானார்கள். பிறகு என் பக்கம் தம் கையால் சைகை காட்டி, ‘உம்மு காலிதே! இது ‘சனா’ (அழகாயிருக்கிறது)’ என்று சொல்லலானார்கள்.
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ‘சனா’ எனும் அபிசீனியச் கொல்லுக்கு ‘அழகு’ என்று பொருள்.
அறிவிப்பாளர் இஸ்ஹாக் இப்னு ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஆடையை உம்மு காலித் (ரலி) அவர்கள் அணிந்திருந்தைப் பார்த்ததாக எங்கள் குடும்பப் பெண் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.64
Book : 77
(புகாரி: 5845)بَابُ مَا يُدْعَى لِمَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا
حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ العَاصِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَتْنِي أُمُّ خَالِدٍ بِنْتُ خَالِدٍ، قَالَتْ
أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ، قَالَ: «مَنْ تَرَوْنَ نَكْسُوهَا هَذِهِ الخَمِيصَةَ» فَأُسْكِتَ القَوْمُ، قَالَ: «ائْتُونِي بِأُمِّ خَالِدٍ»
فَأُتِيَ بِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَلْبَسَنِيهَا بِيَدِهِ، وَقَالَ: «أَبْلِي وَأَخْلِقِي» مَرَّتَيْنِ،
فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَلَمِ الخَمِيصَةِ وَيُشِيرُ بِيَدِهِ إِلَيَّ وَيَقُولُ: «يَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَا وَيَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَا» وَالسَّنَا بِلِسَانِ الحَبَشِيَّةِ الحَسَنُ
قَالَ إِسْحَاقُ: حَدَّثَتْنِي امْرَأَةٌ مِنْ أَهْلِي: أَنَّهَا رَأَتْهُ عَلَى أُمِّ خَالِدٍ
சமீப விமர்சனங்கள்