தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5851

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உபைத் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

நான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை பார்த்தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை’ என்று கூறினேன். அவர்கள் ‘அவை யாவை? இப்னு ஜுரைஜே!’ எனக் கேட்டார்கள். நான் ‘(கஅபாவைச் சுற்றி வரும்போது) அதன் மூலைகளில் ‘ஹஜருல் அஸ்வத்’ மற்றும் ‘ருக்னுல் யமானி’ ஆகிய) இரண்டு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக் கண்டேன். மேலும், (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹஜ் மாத) பிறை பார்த்தவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும் நீங்கள் மட்டும் (துல்ஹஜ்) எட்டாவது நாள் வரும்வரை இஹ்ராம் கட்டாமலிருப்பதை கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)’ என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரண்டு மூலைகளை மட்டுமே தொட்டதை பார்த்தேன். (எனவே தான் நானும் அப்படிச் செய்கிறேன்.)

(முடி அகற்றப்பட்ட) செருப்புகளைப் பொறுத்தவரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும், அதனுடன் அங்கசுத்தி (உளூ) செய்வதையும் பார்த்திருக்கிறேன். எனவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன்.

மஞ்சள் நிறமோ, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனால் (தம் ஆடைக்குச்) சாயமிடுவதை பார்த்திருக்கிறேன். எனவே, நானும் அதனால் (என் ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன்.

(துல்ஹஜ் எட்டாம் நாள்) இஹ்ராம் கட்டுவதோ, இறைத்தூதர் (ஸல்) எட்டாம் நாள்) பயணத்திற்குத் தயாராகி நிற்கும் வரை இஹ்ராம் கட்டி நான் பார்த்ததில்லை.

Book :77

(புகாரி: 5851)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ: أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا، قَالَ: مَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ؟ قَالَ: رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلَّا اليَمَانِيَيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ، أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ، وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ.

فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَمَّا الأَرْكَانُ: ” فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَسُّ إِلَّا اليَمَانِيَيْنِ، وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ : فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ: فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا، وَأَمَّا الإِهْلاَلُ: فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.