தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5882

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58

கழுத்து மாலைகளை இரவல் வாங்குதல்.

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

(என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் அங்கசுத்தி (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பி வந்து) நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ (செய்து கொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருளினான்.

இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில், ‘அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவித்தார்.’ என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.92

Book : 77

(புகாரி: 5882)

بَابُ اسْتِعَارَةِ القَلاَئِدِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

«هَلَكَتْ قِلاَدَةٌ لِأَسْمَاءَ، فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهَا رِجَالًا، فَحَضَرَتِ الصَّلاَةُ وَلَيْسُوا عَلَى وُضُوءٍ، وَلَمْ يَجِدُوا مَاءً، فَصَلَّوْا وَهُمْ عَلَى غَيْرِ وُضُوءٍ،

فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ»

زَادَ ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.