பாடம் : 69
தலைமுடியைக் களிம்பு தடவிப் படிய வைத்தல் (தல்பீத்).107
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், ‘(தலையில்) சடை வளர்த்திருப்பவர் (ஹஜ்ஜின் முடிவில் தலை முடியை) மழித்துக் கொள்ளட்டும். (சடை வளர்ப்பதன் மூலம்) களிம்பு தடவித் தலை முடியைப் படிய வைப்பவர்களுக்கு ஒப்பாகி விட வேண்டாம்’ என்று சொல்ல கேட்டேன்.
(இதை அறிவிப்பவரான சாலிம் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.)
(என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் தலை முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துக் கொண்டதை பார்த்தேன்’ என்று கூறுவார்கள்.108
Book : 77
(புகாரி: 5914)بَابُ التَّلْبِيدِ
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ
«مَنْ ضَفَّرَ فَلْيَحْلِقْ، وَلاَ تَشَبَّهُوا بِالتَّلْبِيدِ»
وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُلَبِّدًا»
சமீப விமர்சனங்கள்