இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலை முடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, ‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க, ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க’ என்று கூற கேட்டேன்.
இந்த வார்த்தைகளை விட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை.
(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். இணையில்லாதோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாணவர் எவருமில்லை). 109
Book :77
(புகாரி: 5915)حَدَّثَنِي حِبَّانُ بْنُ مُوسَى، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ مُلَبِّدًا يَقُولُ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ»
لاَ يَزِيدُ عَلَى هَؤُلاَءِ الكَلِمَاتِ
சமீப விமர்சனங்கள்