பாடம் : 95
உருவப் படமுள்ள வீட்டுக்குள் செல்லாமலிருப்பது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் வெறுப்புத் தெரிந்தது. நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்ன திண்டு அது?’ என்று கேட்டார்கள். நான், ‘நீங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலையணையாகப் பயன்படுத்திக்கொள்வதற்காகவும் தான் இதை வாங்கினேன்’ என்று சொன்னேன்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்’ எனக் கூறினார்கள்.
மேலும், உருவப் படங்கள் இருக்கும் வீட்டினுள் (இறைக் கருணையை கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்’ என்றும் கூறினார்கள்.138
Book : 77
(புகாரி: 5961)بَابُ مَنْ لَمْ يَدْخُلْ بَيْتًا فِيهِ صُورَةٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا أَخْبَرَتْهُ
أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى البَابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفَتْ فِي وَجْهِهِ الكَرَاهِيَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، مَاذَا أَذْنَبْتُ؟
قَالَ: «مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ» فَقَالَتْ: اشْتَرَيْتُهَا لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ “
وَقَالَ: «إِنَّ البَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ المَلاَئِكَةُ»
சமீப விமர்சனங்கள்