பாடம் : 4
எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்:
‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள்.4
Book : 78
(புகாரி: 5973)بَابٌ: لاَ يَسُبُّ الرَّجُلُ وَالِدَيْهِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِنَّ مِنْ أَكْبَرِ الكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُلِ، فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ»
மேலும் பார்க்க : முஸ்லிம்-146 , முஸ்னத் தயாலிஸீ-2383 , முஸன்னஃப் இப்னு அபீஷைபா-26575 , அஹ்மத்-6529 , 6840 , 7004 , 7029 , திர்மிதீ-1902 , அல்அதபுல் முஃப்ரத்-27 , 28 , அபூதாவூத்-5141, பஸ்ஸார்-2483 , இப்னு ஹிப்பான்-411 , 412 , ஸுனனுல் குப்ரா-21086 , ஷுஅபுல் ஈமான்-4518 , 7485 , 7486 .
சமீப விமர்சனங்கள்