தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5994

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18

(ஒருவர் தம்) குழந்தைகள் மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக்கொள்வதும்.

நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 22

 அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம் (ரஹ்) அறிவித்தார்:

நான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒருவர் அவர்களிடம், ‘(இஹ்ராம் கட்டியவர்) கொசுக்களைக் கொன்றுவிட்டால் பரிகாரம் என்ன?’ என்று கேட்டார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ‘நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?’ என்ற கேட்டார்கள். அவர், ‘நான் இராக்வாசி’ என்று பதிலளித்தார்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (தம்மருகில் இருந்தவர்களிடம்), ‘இவரைப் பாருங்கள். கொசுக்களைக் கொன்றால் பரிகாரம் என்ன? என்று இவர் என்னிடம் கேட்கிறார். ஆனால், (இராக்வாசிகளான) இவர்களோ நபி (ஸல்) அவர்களின் (புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களின்) புதல்வரைக் கொன்றுவிட்டார்கள். (ஆனால்) நபி (ஸல்) அவர்கள், ‘(ஹஸன் ஹுசைன் ஆகிய) அவர்கள் இருவரும் உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்’ என்று (பாராட்டிக்) கூறக் கேட்டேன்’ என்று கூறினார்கள். 23

Book : 78

(புகாரி: 5994)

بَابُ رَحْمَةِ الوَلَدِ وَتَقْبِيلِهِ وَمُعَانَقَتِهِ

وَقَالَ ثَابِتٌ: عَنْ أَنَسٍ: «أَخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ»

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيٌّ، حَدَّثَنَا ابْنُ أَبِي يَعْقُوبَ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، قَالَ

كُنْتُ شَاهِدًا لِابْنِ عُمَرَ، وَسَأَلَهُ رَجُلٌ عَنْ دَمِ البَعُوضِ، فَقَالَ: مِمَّنْ أَنْتَ؟ فَقَالَ: مِنْ أَهْلِ العِرَاقِ،

قَالَ: انْظُرُوا إِلَى هَذَا، يَسْأَلُنِي عَنْ دَمِ البَعُوضِ، وَقَدْ قَتَلُوا ابْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.